முனி

11


இந்தியத்தை வென்றான் தொடர்பட்டோ(டு) அரம்பம்
முந்து துரந்தான் முனி.
 

 

ஐம்புலன்களின் ஆற்றலை அடக்கி, அகப்புறப் பற்றுகளை நீக்கி,தொழில் அனைத்தும் முற்றுமாக தூறந்தவர் முனிவர் ஆவர்


12

தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு.

 

எழுவகைத் தத்துவங்களை அறிந்து, தள்ளத்தக்கன் தள்ளி, கொள்ளத்தக்கன கொண்டு,தியானங்களில் பொருந்தல் முனிகளது பெருமையாம்.


13

எட்டுவகை உறுப்பிற்று ஆகி இயன்றது
சுட்டிய நற்காட்சி தான்
 

ஆகமங்கள் போற்றிக்கூறும் நற்காட்சியானது எட்டுவகை உறுப்புகளோடு அமைந்தது ஆகும்


நற்காட்சி வேண்டுபவை

14

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை
மெய்பெற இன்னவை நான்கு

 

(இறைவனது மெய்ந்நெறியில்) ஐயமின்மை, (உடலாதி பொருள்களில்)ஆசையின்மை,(துறவோரிடம்)அறுவறுப்பு இன்மை, ( பிற சமயநெறிளை நம்பும்) மயக்கமின்மை, இவை நான்கு உறுப்புகளாகும்.

 


15

அறப்பழி நீக்கல் அழிந்தாரைத் தாங்கல்
அறத்துக்கு அளவளா மூன்று
 

 

(அறவோரின்) குறைகளை நீக்கல் (விரதங்களில் வழுவினாரை) மீண்டும் அவ்வழி நிறுத்தல்,(அறவோர்களிடம்)அன்பு செலுத்துதல் என இவை மூன்று.