ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும், மகத்தான அவரது சிறப்பு அம்சங்களும்


தனது ஒளதாரிக உடலுக்கு வேறு க்ஷத்திரம் செல்ல சக்தி இல்லாதபோது என்பதற்கு ஒளதாரிக உடல், பரதக்ஷத்திரத்தைத் தவிர வேறு க்ஷத்திரத்திற்கு செல்லமுடியாது அல்லது விதேஹ க்ஷத்திரம் செல்லும் தகுதி அதற்கு இல்லை அல்லது ஒரு க்ஷத்திரத்திலுள்ள ஒளதாரிக உடலை உடைய உயிர் அல்லது முனிவர் வேறு க்ஷத்திரத்திற்கு செல்ல இயலாது என்று கூறும் அவர்கள் கருத்தை அவ்வாறே ஏற்றுக்கொண்டால் பொதாக என்ன தவறு நேர்ந்துவிடப்போகிறது என்றால் அதற்கான விளக்கத்தை இப்போது காண்போமாக.

ஒளதாரிக உடலுக்கு விதேஹம் செல்லும் தகுதியே இல்லை என்று கருதினால் விதேஹக்ஷத்திரத்தில் ஒளதாரிக உடலை உடையவர்கள் இருக்க இயலாது என்று பொருள்படும். ஆனால் அங்கு இருப்பவர்கள் அனைவருமே ஒளதாரிக உடலை உடையவர்கள்தான். அவ்வளவு ஏன் இரண்டரைத் தீவிலுள்ள அனைத்து மனித, விலங்கு உயிர்களுமே ஒளதாரிக உடலை உடையவைகளேயாகும். தேவர்களுக்கும், நரக உயிர்களுக்குமே வைக்யக உடலாகும். எனவே ஒளதாரிக உடலை உடையவர்கள் விதேஹ நாட்டில் இருக்கும்போது அங்கு மற்றொரு ஒளதாரிக உடல் ஏன் செல்ல இயலாது?

வேறு க்ஷத்திரத்தைச் சேர்ந்த, ஒளதாரிக உடலை உடையவர்கள் விதேஹம் செல்ல இயலாது என்று கொண்டால் அதுவும் பொருந்தாது. ஏனெனில் மனிதர்கள் இரண்டரைத் தீவுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்பதுதான் ஆகமம் கூறும் கருத்தாகும். எனவேதான் இரண்டரைத்தீவுக்கு அப்பாலுள்ள மலைக்கு மானுஷோத்தர பர்வதம் (மனிதர்களுக்கு எல்லையாக அமைந்த மலை) என்று பெயர் வழங்கலாயிற்று. எனவே மனிதர்கள் இரண்டரைத் தீவுக்குட்பட்ட ஐந்து விதேஹத்திற்குமே செல்ல முடியும். ஆகமம் இப்படி இருக்க முதல் தீவாகிய நமது ஜம்புதீவிற்குள் இருக்கும் விதேஹத்திற்கு செல்ல இயலாது என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்?

மனிதர்கள் இரண்டரைத் தீவுகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அல்லது செல்லும் தகுதி உள்ளது. ஆனால் பரதக்ஷத்திரத்திலிருந்து இதுவரை யாரும் வேறு க்ஷத்திரத்திற்கு சென்றதில்லை என்று கூறுவதற்கும் வழியில்லை. ஏனெனில் நாம் வாழும் இந்த பரத கண்டத்தில் தோன்றிய தீர்த்தங்கரர்களுக்கு ஜன்மாபிஷேக வைபவம், விதேஹ நாட்டிலுள்ள மேருமலைமீது நடப்பதை நாம் அறிவோம். தீர்த்தங்கர பாலகனையாவது தேவர்கள் ஏந்திச் செல்கின்றனர். ஆனால் கிருஷ்ணர் தாமாகவே தாதகீ கண்டதீவுவரை சென்றுவந்தார் என்று ஆகமம் பறை சாற்றுகிறது. மேலும் சாந்திநாத தீர்த்தங்கரர் தன்னுடைய முற்பிறவியில் சாதாரண மனிதனாகப் பிறந்தபோது பூதத்தின் உதவியால் இரண்டரைத் தீவுகளையும் சுற்றிப்பார்த்தார் என்றும் ஆகமம் கூறுகிறது.

தீர்த்தங்கரர்கள், கிருஷ்ணர் போன்ற மாமனிதர்கள் செல்லலாம். ஆனால் திகம்பர துறவறத்தை பேணும் மாமுனிவர்கள் செல்ல இயலாது என்றால் அதையும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் இரண்டரைத் தீபங்களுக்கு உட்பட்ட பகுதியில் முனிவர்கள் தவம் புந்து முக்தி அடையாத இடமே இல்லை என்று ஆகமம் கூறுகிறது. எல்லா இடத்திலிருந்தும் முனிவர்கள் முக்தி அடைந்துள்ளனர். போகபூமியில் பிறந்தவர்கள் முனிநிலையை ஏற்க இயலாது. ஆனால் அங்கிருந்தும் அனந்தானந்த முனிவர்கள் சித்த பதவி அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேறு க்ஷத்திரத்தைச் சார்ந்தவர்களே ஆவர். எனவே முனிவர்கள் வேறு க்ஷத்திரம் செல்ல இயலாது என்று கூறுவதற்கில்லை. ஆனால் பரத கண்டத்தைச்சார்ந்த மாமுனிவர் கால்நடையாகவே பயணம் செய்து விதேஹம் சென்றடைவது அதான காரியமாகும். ஏனெனில் மகாவிரதத்தைத் தாங்கி நிற்கும் அவர்கள் வானுயர்ந்த மலைகளையும், பரந்துவிந்த பெருங்கடல்களையும்,வற்றாத நதிகளையும் கால்களால் கடந்துசெல்வது என்பது இயலாத ஒன்று எனலாம். ஆனால் த்திபெற்ற முனிவர்களுக்கு அது எளிதாகும். தேவர்கள் அல்லது த்திபெற்ற மற்ற முனிவர்கள் வாயிலாக த்திபெறாத முனிவர்களும் வேறு க்ஷத்திரம் அல்லது தீவிற்கு செல்ல இயலும். அவ்வாறில்லையெனில் அகன்றுவிந்த ஆழ்கடல் மீதிருந்தும், போகபூமி மீதிருந்தும் முனிவர்கள் எங்ஙனம் முக்தி அடைய இயலும்? எனவே இந்த ஆகமக் கருத்துக்களை உற்று நோக்கும்போது, 'பரத கண்டத்தைச் சார்ந்த ஒரு முனிவரோ அல்லது மனிதரோ வேறு க்ஷத்திரம் அல்லது விதேஹக்ஷத்திரம் செல்ல இயலாது' என்று கூறுவதை ஏற்பதற்கில்லை.

மேலும் முனிவர் நடந்தே விதேஹம் செல்வது கடினமான காரியம் என்று கூறியதால் குந்த குந்தர் விதேஹம் செல்லவில்லை என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் குந்த குநு;தாசாரியர் நடந்தே விதேஹம் சென்றார் என்று எவரும் கூறவில்லை. அவருக்கு சாரணாத்தி இருந்ததை ஏற்கெனவே கல்வெட்டுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளோம். மேலும் அவர் சாரண பரமேட்டிகள் மூலம் விதேஹம் சென்று வந்தார் என்று ஆகம வரலாறு கூறுகிறது. இவ்வாறு வீதராக தர்மத்தைப் போற்றும் ஆசாரியர்களும், தேவசேனாசாரியார் போன்ற மாமுனிவர்களும், அவர்களால் படைக்கப்பட்ட ஆகமங்களும், பல்வேறு கல்வெட்டுச் சான்றுகளும், ஆசாரிய குந்த குந்தர் விதேஹம் சென்று சீமந்தர பகவானை தாசித்து வந்தார் என்று பறை சாற்றும்போது அக்கருத்தை, எந்த ஆதாரத்தைக்கொண்டு மறுப்பது? அவ்வாறு மறுப்பதால் விளையும் நன்மை யாது?

இவ்வாறு ஆசாரிய குந்த குந்தர் விதேஹம் சென்று சீமந்தர பகவான் சமவசரணத்தை அடைந்து அறங்கேட்டு வந்தார் என்ற கருத்து தகுந்த ஆதாரங்களுடன் தெளிவாக்கப்பட்டது.

ஆசாரிய குந்த குந்தரும் மகத்தான அவரது சிறப்பு அம்சங்களும் என்ற தலைப்பின்கீழ் ஆசாரிய குந்த குந்தருக்குக் கூறப்படும் திருப்பெயர்கள், அதற்கான காரணங்கள், அவர் பெற்றிருந்த சாரணாத்தி, விதேஹம் சென்று வந்த நிகழ்ச்சி ஆகியவை எடுத்துக்காட்டப்பட்டன. இடையிடையே ஊர்ஜயந்தகி நிகழ்ச்சியும், பிற ஆசாரியர்களின் புகழ்மாலைகளும், மேற்கண்ட சிறப்பு அம்சங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டன.

www.jainworld.com