ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும் அவரது வாழ்க்கைச் சார்ந்த கதைகளும்

1)  கதைப் பகுதி

நமது சமய நூல்களில் சாஸ்திரதானத்தின் பெருமையை விளக்கும் பகுதிகளில், ஆசாரிய குந்த குந்தர் தனது முற்பிறவியில் செய்த சாஸ்திரதானத்தையும் அதன் பயனையும் எடுத்துக்காட்டியுள்ளனர். அவ்வாறு எடுத்துக்காட்டியபோது ஆசாரியான் வாழ்க்கையைப்பற்றிய சில குறிப்புகளையும் தந்துள்ளனர். அக்குறிப்புகளே கதைவடிவம் பெற்றன.

ஆசாரிய ஸமந்தபத்திரர் தனது இரத்தினகரண்ட சிராவகாசாரத்தில் நால்வித தானங்களில் தலைசிறந்தவர்களை கீழ்வரும் சுலோகம் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஷேணவ்ருஷ்பஸேனே, கெளண்டேச: சூகரச்ச த்ருஷ்டாந்தா:
வையாவ்ருத்யஸ்யைதே, சதுர்விகல்பஸ்ய மந்தவ்யா

 - இரத்தினகரண்ட சிராவகாசாரம் (188வது செய்யுள்)

இதுவே அருங்கலச்செப்பில், 141-வது செய்யுளில்

  'சிசேன, இடபமா சேனையே பன்றி
உரைகோடல், கொண்டை, உரை.'

என்றவாறு கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரத்தினகரண்ட சிராவகாசார சுலோகத்தின் சமஸ்க்ருத உரையில், உரையாசியர்கள் சுலோகத்தில் குறிப்பிட்டுள்ள நால்வான் கதைகளையும் எடுத்துக்கூறியுள்ளார்.

மேலும் ஸாகார தர்மாம்ருதம் என்னும் நூலிலும் ',.கெளண்டேச புஸ்தகார்சா விதரண விதிநாப்யாகமாம்போதிபாரம்,.' என்னும் இந்த 70-வது செய்யுளில் கெளண்டேசர் (குந்த குந்தாசாரியர்) நூலினை போற்றி வணங்கி தானம் செய்த காரணத்தால் ஆகமப்பெருங்கடலின் கரையை கடந்தவரானார். அதாவது கெளண்டேசர் முற்பிறவியில் தான் செய்த சாஸ்திரதானத்தின் பயனாக ஜினாகமத்தின் ஆழ்ந்த கருத்தை நன்கறிந்தவராயினார் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட அச்செய்யுளின் ஸம்ஸ்க்ருத உரையிலும் குந்த குந்தான் வாழ்க்கைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இவைதவிர ஞானப்ரபோதம், ஆராதனா கதாகோசம், புண்யாஸ்ரவ கதாகோசம், ப்ருஹத்கதாகோசம் போன்ற கதைநூல்களிலும் ஆசாரிய குந்த குந்தான் வாழ்க்கைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவையனைத்தும் ஒரே விதமான கதையைக்கொண்டு இருப்பினும் பெயர், ஊர் முதலியவற்றில் சில மாற்றங்களைக் கொண்டுள்ளன. அவ்வனைத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது ஆசாரியான் கதை கீழ்கண்டவண்ணம் மூவிதமாக அமைகிறது.

இப்போது ஞானப்ரபோதம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதையைச் சுருக்கமாகக் காண்போமாக.


மாளவ தேசத்தின் தலைநகர் வாராபுரம். அங்கு குமுத சந்திரன் என்ற பெயருடைய அரசன் செங்கோலோச்சி வந்தான். அவன் மனைவி குமுதசந்திரிகா. அந்த நாட்டில் 'குந்த' என்ற பெயருடைய வணிகனும் வசித்து வந்தான். அவன் மனைவி 'குந்தலதா'. அவர்களுக்கு 'குந்த குந்தர்' என்ற மகன் பிறந்தான்.

ஒரு நாள் பாலகன் குந்த குந்தன் தன் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்தபோது ஜினசந்திரர் என்ற முனிவர் அந்நகருக்கு எழுந்தருளினார். நகரமக்கள் முனிவாடம் அற உபதேசம் கேட்கச் சென்றபோது குந்த குந்தனும் உடன் சென்றான். அற உபதேசத்தைக் கேட்ட குந்த குந்தர் முனிவான் அருளுரையால் ஈர்க்கப்பட்டு அவாடமே துறவுமேற்கொண்டான். அப்போது குந்த குந்தனுக்கு வயது பதினொன்றாகும். குந்த குந்தான் தவநெறியைக் கண்டு வியந்த குருவரர், அவருக்கு 33 வயதில் ஆசாரிய பதவியைத் தந்தருளினார்.

ஒருமுறை ஆசாரிய குந்த குந்தருக்கு ஜைன தத்துவ ஞானத்தில் ஓர் ஐயம் ஏற்பட்டது. அப்போது அவர் தூய, மனம், வாக்கு மற்றும் காயங்களால் விதேஹ க்ஷத்திரத்திலுள்ள சீமந்தர தீர்த்தங்கர பகவானை வணங்கினார். அப்போது சீமந்தர பகவான் வீற்றிருந்த சமவசரணத்தில் 'நல்லறம் செழிப்பதாக' என்ற ஆசீர்வாத ஒலி ஏற்பட்டது. அறவுரையின் நடுவே திடீரென இவ்வாறு ஆசிர்வாதம் ஒலித்ததைக்கண்டு அனைவரும் வியந்தனர். காரணம் அறிய விழைந்த அவர்களுக்கு திவ்யத்வனி வாயிலாகவே அதற்கான காரணமும் அருளப்பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு காரணபரமேட்டிகள் குந்த குந்தரைக்காண வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் பரதக்ஷத்திரம் வந்து குந்த குந்தரை தாசித்து சீமந்தர பகவானின் சமவசரணத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறினர். பிறகு, குந்த குந்தான் விருப்பத்திற்கிணங்க அந்த சாரணபரமேட்டிகளே அவரை விதேகம் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் குந்த குந்தான் பீலிகை தவறி கடலில் விழ அருகிலிருந்த தீவு ஒன்றில் காணப்பட்ட கழுகிறகுகளையே பிச்சாக ஏற்று விதேகம் அடைந்தார்.

அங்கு தீர்த்தங்கர பகவானை தாசித்து ஒருவாரம் அங்கேயே தங்கி இருந்தார். அப்போது தமக்கு இருந்த ஐயங்களை கேவலியிடம் கேட்டறிந்து ஐயம் நீங்கி மீண்டும் பரதகண்டம் திரும்பினார். வரும் வழியில் பல்வேறு புனித தலங்களை (தீர்த்த க்ஷத்திரங்களை) தாசித்து வந்தார். வரும்போது தம்முடன் ஒரு ஆகமும் கொண்டுவந்தார் என்றும், அது கடலில் வீழ்ந்துவிட்டது என்றும் கூறுவர்.

இங்கு வந்து பவ்ய ஜீவன்களுக்கு அற உபதேசம் செய்தருளினார். அப்போது 700 பேர் அவாடம் துறவறம் மேற்கொண்டனர். அப்போது சென்றபின் ஊர்ஜயந்திகியை அடைந்த ஆசாரிய குந்த குந்தர், அங்கு திகம்பர-சுவேதாம்பரர்களுக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த சமய விவாதத்தைக் கண்டார். விவாதத்தின்போது சுவேதாம்பரர்கள், தாங்கள் கூறும் கருத்தை உண்மையாக்க, ப்ராஹ;மி தேவி (சரஸ்வதிதேவி) என்னும் ஒரு கற்சிலையை நிறுவியிருந்தனர். ஆசாரிய குந்த குந்தர் அந்த கற்சிலை வாயிலாகவே, நிர்க்ரந்த திகம்பர தர்மமே உண்மையான அறம் என்று நிரூபித்து நல்லறத்தை நிலைநாட்டினார். அதன் பிறகு தமது சீடரான உமாஸ்வாமிக்கு ஆசாரிய பதவியைத் தந்து, தவவலிமையால் சமாதியடைந்து தேவசுகத்தை அனுபவித்து வருகிறார்.

பேராசியர் ஏ.சக்ரவர்த்தி நைனார் அவர்கள், பஞ்சாஸ்திகாய முன்னுரையில் எழுதியுள்ள கதை கீழ்வருமாறு. இக்கதை, கதாகோசத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரத கண்டத்தின் தென்பகுதியில் பிடதநாடு என்னும் பெயருடைய ஒரு நாடு இருந்தது. இந்த நாட்டுக்குட்பட்ட 'குருமரயீ' என்ற ஊல் 'கரமுண்டன்' என்னும் செல்வந்தன் வசித்து வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் ஸ்ரீமதி. அவர்கள் வீட்டில் மதிவரன் என்னும் ஆயர்குலச் சிறுவன் வேலை செய்துவந்தான்.

ஒருநாள் காட்டில் மாடுமேய்த்துக்கொண்டிருந்தபோது காட்டின் ஒருபகுதி முற்றிலுமாக எந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் அப்பகுதியின் நடுவில் சில மரங்கள் மட்டும் பசுமையாகக் காட்சி அளித்தன. அதைக் கண்ட மதிவரன் மிகவும் வியப்புற்றான். காரணம் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலுற்ற அவன் அதனருகில் சென்று உற்று நோக்கினார், அங்கு ஒரு மரப்பொந்தினுள் வைக்கப்படிருந்த ஆகமத்தைக்கண்டு மெய்சிலிர்த்துப் போனான். இந்த ஆகமத்தின் காரணமாகவே இம்மரங்கள் தீயில் கருகவில்லைபோலும் என்றெண்ணி அந்த ஆகமத்தை வணங்கி பணிவுடன் வீட்டிற்கு எடுத்தக்கொண்டு வந்தான். அங்கு தான் இருந்த அறையில் தூய்மையான உயர்ந்த இடத்தில் அவ்வாகமத்தை வைத்து தினமும் வணங்கி வரலாயினான்.

சில நாட்கள் கழிந்தபின் முனிவர் ஒருவர் எழுந்தருளினார். முனிவரைக்கண்ட கரமுண்டன் அவருக்கு ஆகாரதானமளித்து மகிழ்ந்தான். அப்போது மதிவரன் அம்முனிவான் பெருமையை உணர்ந்து அவாடம் அந்த ஆகமத்தை வழங்கி அது கிடைக்கப்பெற்ற விதத்தையும் விவாத்தான். முனிவர் மகிழ்ச்சி அடைந்து ஆசி கூறி வாழ்த்தியருளினார். கரமுண்ட தம்பதிகளுக்கு இப்போது குழந்தை ஏதும் இல்லை என்பதையும், மதிவரனே அவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்து யாவரும் போற்றும் வண்ணம் பொய மகானாகவும், ஞானியாகவும் ஆவான் என்பதையும் தனது திவ்ய (நிமித்த) ஞானத்தால் அறிந்து அவ்வாறே அருளிச்செய்தார்.

முனிவர் அருளியவாறு மதிவரன் இறந்துபோய், பின்பு அந்த கரமுண்ட தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான். தனது பதினொன்றாவது அகவையில் தறவு பூண்டது முதல் எஞ்சிய கதைப்பகுதி முன்போல் அறியவும்.


பிரம்மநேமிதத்தர் அருளிய 'ஆராதனா கதா கோசம்' என்னும் நூலிலும் சாஸ்திர தானத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கதை கூறப்பட்டுள்ளது. கதைச் சுருக்கம் பின்வருமாறு-

பரதக்ஷத்திரத்தில் குருமரயீ என்னும் ஊல் கோவிந்தன் என்ற ஆயர்குலச் செல்வன் இருந்தான். ஒருமுறை காட்டில் குகை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஆகமந்தைக்கண்டு அதை பத்மநந்தி என்ற முனிவருக்கு தானமாக அளித்தான். அந்த நூலுக்கு ஒரு மகிமை உண்டு. அதாவது தலைசிறந்த ஆசாரியர்கள் பலர் அந்நூலை தொடர்ந்து தாசித்து வணங்கி வந்துள்ளனர். அதற்கு பல விவுரைகளையும் எழுதி உள்ளனர். மேலும் அந்நூலை அக்குகையிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஸ்ரீ பத்மநந்தி முனிவரும் அந்நூலை அங்கேயே விட்டுச் சென்றார்.

கோவிந்தனும் அத்தகைய நூலின் பெருமையை உணர்ந்து தினமும் அந்த குகைக்குச் சென்று அதை வழிபட்டு வரலாயினான். ஒரு நாள் கோவிந்தன் காட்டிற்குச் சென்றபோது பாம்பு அவனைத் தீண்ட அவனும் இறந்து அவ்வூன் செல்வந்தனுக்கே மகனாகத் தோன்றினான். சிலகாலம் சென்றபின் ஸ்ரீ பத்மநந்தி முனிவர் அங்கு எழுந்தருளினார். தற்செயலாக அம்முனிவரைக்கண்ட அச்செல்வந்தனின் புதல்வனுக்கு ஜாதிஸ்மரணம் (முற்பிறவி நினைவு) தோன்றியது. அதன் மூலம் தான் கோவிந்தனாக இருந்தபோது சாஸ்திரதானம் அளித்ததையும், அம்முனிவர்தான் இவர், என்பதையும் அறிந்தான். அறத்தின் மகிமையையும் சாஸ்திரத்தின் பெருமையையும் உணர்ந்த அவன் அம்முனிவாடமே தீட்சை (துறவு) ஏற்று சமாதிமரணம் எய்தினான்.

பிறகு அவரே கெளண்டேசன் என்னும் அரசனாகி, மீண்டும் பற்றை நீக்கி அரசபதவியைத் துறந்து, அகிலம்போன்றும் குந்த குந்த ஆசாரியராகி சுருத ஞானியாயினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரத்தினகரண்ட சிராவகாசாரத்திலும், ஸாகார தர்மாம்ருதத்திலும் உள்ள கதைக்குறிப்புகளும், இக்கதையில் கண்ட பெயர்களையும், நிகழ்ச்சிகளையுமே எடுத்துக்காட்டுவதுபோல் அமைந்துள்ளன.

இம்மூன்று கதைகளையும் ஒப்பிடுகையில் பெயர்கள் மாறி இருப்பதைத்தவிர வேறெந்த பொய மாற்றமும் காணப்படவில்லை.

ஞானப்ரபோத நூலில் கூறப்பட்டுள்ள கதையில் குந்த குந்தான் முற்பிறவியைப்பற்றிய செய்தி ஏதுமில்லை. மற்ற இருகதைகளில் ஒன்றில் ஆகமம் மரப்பொந்தில் இருந்ததாகவும், மற்றொன்றில் குகையில் இருந்ததாகவும் கூறப்பட்டள்ளது. இவைதவிர வேறெந்த பெருத்த மாற்றமும் காணப்படவில்லை. பெயர்கள் மாறிவரக்காரணம் என்ன என்பது ஆராய்ச்சிக்குய ஒன்றாகும். ஒருவேளை முக்குடை (ஜுலை-1990)யில் வெளிவந்த குந்த குநு;தர் எத்தனை பேர்? எங்கு, எப்போது தோன்றினர்? என்ற கட்டுரைக்கிணங்க ஆசாரிய குந்த குந்தான் ஒப்பற்ற ஆற்றலையும், மங்காப் புகழையும் கண்ட பிற்கால முனிவர்கள், தாங்களும் குந்த குந்தரைப் போல ஒழுக்கசீலர்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பெயரை பயன்படுத்தினார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் புகழ்மிக்க சான்றோர்கள் வழிசெல்வதை அனைவரும் விரும்புவர். அதற்காக அச்சான்றோர்களின் பெயர்களை தங்களுக்கு சூட்டி மகிழ்வது இயற்கையே. தீர்த்தங்கரர்கள், பரதர், பாகுபலி போன்ற மகாபுருடர்களின் பெயர்களை நமக்கு இட்டு மகிழ்வதை நாமனைவரும் நன்கறிவோம். ஆசாரிய பரம்பரையில்கூட, இரண்டாம் பத்ரபாகு, இரண்டாவது மகாநந்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் இதையே காட்டுகிறது. எனவே ஆசாரிய குந்த குந்தர் பெயால் பிற்காலத்திலும் ஆசாரியர்கள் தோன்றினார்களா? என்பதும் ஆராய்ச்சிக்குயதாகும். இருப்பினும் தகுந்த ஆதாரம் கிடைக்காதவரை, கதைகளில் பெயர்கள் மாறிவருவதை மட்டும் காரணமாகக்கொண்டு இக்கருத்தை ஏற்க இயலாது.

மேலும், மேற்கண்ட மூன்று கதைகளையும் உற்றுநோக்கும்போது ஆசாரிய குந்த குந்தான் வாழ்க்கை வரலாறு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை உணரலாம். எவ்வாறெனில், பொதுவாக இக்கால ஆசாரியர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும்போது அவர்களுடைய இப்பிறவி சார்ந்த நிகழ்வுகளையே குறிப்பிடுவர். இக்கால ஆசாரியர்களின் முற்பிறவி சார்ந்த கதைகள் இல்லை என்றே கூறலாம். ஆனால் ஆசாரிய குந்த குந்தான் வாழ்க்கையில் அவருடைய முற்பிறவி வரலாறும் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இவருடைய வாழ்க்கை வரலாறு வெறும் கதையாகவோ, சுயசாதையாகவோ இல்லாமல் ஆகமத்தில் வரும் சாஸ்திரதானக்கருத்தை வலியுறுத்தும் எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. 'சாஸ்திரங்களைப் படைத்தவரே சாஸ்திர கருத்துக்களுக்கு உதாரணமாகவும் திகழ்கிறார்' இது அவருக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட ஆசாரிய ஸ்ரீயின் கதை மூவிதமாக அமைந்துள்ளது.

ஆத்மானுபூதியை பிரத்யக்ஷமாக அனுபவித்து பேரானந்தத்தை எய்திய இம்மாமுனிவர் இறுதியில் கர்நாடகத்திலுள்ள 'குந்தாத்' என்ற மலையை அடைந்து சமாதி அடைந்தார் என்று கூறப்படுகிறது. 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த 'தைலபன்' என்னும் அரசன் அம்மலையின் சிறப்பைக் கருத்தில்கொண்டு அங்கு பகவான் பார்ஸ்வநாதர் ஜினாலயத்தை நிர்மாணித்தான். அரச வைபவத்தோடு அதற்கு பிரதிஷ்டையும் செய்வித்தான். இதன் காரணமாக அவ்வரசன் அனைவராலும் பாராட்டப்பட்டான். இம்மலைமீது எளிதில் ஏறி தாசிக்கவேண்டி, 'குட்டேகோ' என்ற ஊரைச் சார்ந்த திருமதி. காடம்மா, திரு. நாகப்பா ஹேக்டே குடும்பத்தினர் படிகளை அமைத்துப் புண்ணியப்பேற்றைப் பெற்றுள்ளனர். இவ்வாறு ஸ்ரீ குந்த குந்தாசாரியர் சமாதி அடைந்த இடம் பற்றிய குறிப்பும் தரப்பட்டது.*

இனி, குந்த குந்தான் குழந்தைப் பருவத்தில் இவர் தாயார் இவரை தாலாட்டிப்பாடிய தாலாட்டுப் பாடலைப் பற்றி சிந்திப்போமாக. குந்த குந்தான் தாயாரால் பாடப்பட்ட அந்த தாலாட்டை ஆசாரியர் சுபசந்திரர் தோத்திரமாக படைத்துள்ளார். இதன்மூலம் குந்த குந்தான் தாயாரும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆசாரிய சுபசந்திரர் அருளிய அந்த 'மந்தாலசா தோத்திரம்' அனைவருக்கும் பயனுடையது என்றாலும், குழந்தைகளை தாலாட்டி வளர்க்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும், அவர்கள் அறவழியில் சிறந்து விளங்கி போன்பத்தை அடைய வழிவகுக்கும் என்பதால் இங்கு அந்த தோத்திரம் பொருளுடன் தரப்படுகிறது.
  ஆதாரம் : திரு. எம்.பி.பாடீல் அவர்களின் 'ஆசாரிய குந்த குந்த தேவர்' என்ற நூலின் இந்தி மொழியாக்கம் (பக்கம்-111)

www.jainworld.com