ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தான் நூல்களும் அவற்றின் உரையாரிசாயர்களும்

ஆசாரிய குந்தகுந்தர் அருளிய பெரும்பாலான நூல்கள் யாவும் ஸெளரஸேனீ ப்ராக்ருத மொழியில் அமைந்தவையாகும். அவர் நூல்கள் பெரும்பாலும் பாகுடம் (ப்ராப்ருதம்), அல்லது ஸாரம் (சாரம்) என்ற சொலலை ஈற்றாகக் கொண்டுள்ளன. இங்கு ஸாரம் என்ற சொல்லுக்கு பிழிவு அல்லது தேர்ந்தகருத்து என்று கொள்ளலாம். இச்சொல் ஸமஸ்க்ருத பிராக்ருத மொழிகள் இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாகுடம் என்ற சொல் பிராக்ருதமொழிச் சொல்லாகும். அதை ப்ராப்ருதம் என்று ஸமஸ்க்ருதத்தில் கூறுவர்.

இப்போது பாகுடம் (ப்ராப்ருதம்) என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். முன்பே கூறியபடி சுருதத்தின் 12 அங்கங்களுள் 12வது அங்கமாகிய திருஷ்டி ப்ரவாதாங்கம் 14 பூர்வங்களை உடையதாகும். அந்த 14 பூர்வங்களுள் ஞானப்ரவாத பூர்வத்தின் வஸ்து அதிகாரத்திற்குட்பட்ட பிவுக்கு பாகுடம் (ப்ராப்ருதம்) என்று பெயர். அஹியாரோ பாஹடயம் என்ற கோம்மடஸார ஜீவகாண்ட காதை எண் 340-ன்படி ப்ராப்ருதமும் ஒரு அதிகாரமாகும். மொத்தமுள்ள 14 பூர்வங்களில் ப்ராப்ருதங்களின் (பாகுடங்களின்-அதிகாரங்களின்) எண்ணிக்கை மட்டும் 3900 ஆகும் என்பர்.


மேலும், ஆசாரிய குந்த குந்தான் உரையாசியர்களுள் ஒருவரான ஐயசேனாசாரியார் பாகுடம் என்ற சொல்லுக்கு காணிக்கை என்ற பொருளைத் தந்துள்ளார். எவ்வாறு அரசனை தாசிக்கக் காணிக்கை கொண்டு செல்லப்படுகிறதோ, அவ்வாறே ஆன்ம அரசனை தாசிக்க பாகுடம் காணிக்கைக்கு ஒப்பாகும் என்பார். பிராக்ருத ஸமஸ்க்ருத மொழி அகாராதிகளிலும் காணிக்கை என்று பொருள் தரப்பட்டுள்ளது. ஆசாரிய அம்ருதசந்திரர் பாகுடம் என்ற சொல்லுக்கு, ஜின பிரவசனத்தின் ஒரு பாகம் (பகுதி) என்று பொருள் கண்டுள்ளார். ஸ்ரீயதிவ்ருஷபாசாரியார் பாகுடம் என்ற சொல்லுக்கு 'ஜம்ஹா பதேஹி புதம் (புடம்) தம்ஹாபாகுடம்' அதாவது பதங்களால் தெளிவாக்கப்பட்டது பாகுடம் என்று கூறியுள்ளார்.* ஷட்கண்டா கமத்தின் ஜயதவல உரை ஆசியர் வீரசேனமாமுனிவர் ப்ராப்ருதம் என்ற சொல்லுக்கு 'ப்ரக்ருஷ்டேன தீர்த்தங்கரேண ஆப்ருதம் ப்ரஸ்தாபிதம் இதி ப்ராப்ருதம்' என்று கூறியுள்ளார். தலைசிறந்த தீர்த்தங்கரரால் அருளப்பட்டு, நிலைநாட்டப்பட்டது ப்ராப்ருதம் என்று இதற்கு பொருளாகும். பாகுடம் என்றால் ஸாரம் அதாவது ஜின பிரவசனத்தின் சாரம் என்றும் கூறுவர் ஆசாரியர்கள்.

இவ்வாறு ஆசாரிய குந்த குந்தான் நூல்கள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கண்டோம். இப்போது ஆசாரிய குந்த குந்தான் நூல்களுக்கு உரை எழுதிய உரையாசியர்களைப்பற்றி சுருக்கமாகக் காண்போமாக.

ஆசாரிய குந்த குந்தான் நூல்களுக்கு ஆசாரிய அம்ருத சந்திரர், ஆசாரிய ஜயஸேனர், மாமுனிவர் பத்மப்ரபமலதாரி தேவர், பட்டாரக சுருதஸாகர்சூ ஆகியோர் ஸம்ஸக்ருத மொழியிலும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வடநாட்டைச் சார்ந்த பண்டிட் ஜயசந்த் சாப்டா, பாண்டே ஹேமராஜ்ஜீ பண்டிட் பனாரஸிதாஸ், பாண்டேராஜ்மல்ஜீ ஆகியோர் டூண்டாரி (இந்தி) மொழியிலும் உரைகள் எழுதி உள்ளனர்.

மேலும் ஆசாரிய குந்த குந்தான் நூல்களில் கூறப்பட்டுள்ள காதைகளை மேற்கோள்களாகவும் சம்ஸ்க்ருதத்தில் அக்கருத்துக்களை மொழி மாற்றம் செய்தும், ஆசாரிய பூஜ்யபாதர், ஆசாரிய தேவநந்தி, ஆசாரிய யதிவிருஷபர், ஆசாரிய வீரஸேனர் ஆசாரிய உமாஸ்வாமி முதலிய ஆசாரியர்கள், தங்கள் நூல்களில் எடுத்துக்காட்டி ஆசாரியான் கருத்துக்களைப் போற்றிவந்துள்ளனர். அத்துடன் நயசக்ரத்தை அருளிய 'மாயில்லதவலர்' குந்த குந்தரால் அருளப்பட்ட நூல்களின் ஸாரத்தைக்கொண்டு இந்நூலை எழுதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசாரிய குந்த குந்தான் சுருத பரம்பரையைத் தழுவி பிற்காலத்தில் ஆத்மானுசாஸனம், தத்வார்தஸாரம், யோகஸாரம், கார்த்தகேயானுப்ரேக்ஷ, சத்பாக்ஷதாவலி, இஷ்டோபதேசம், ஆத்மமீமாம்ஸா போன்ற ஆன்மீய நூல்கள் தோன்றின என்றால் அது மிகையாகாது.

ஆசாரிய குந்த குந்தரால் அருளப்பட்ட நூல்களுள் நமக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற நூல்கள் அனைத்தும் மேற்கண்ட உரையாசியர்களின் உரையுடன் இந்தி மொழியில் அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குஜராத்தி, மராட்டி, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் குந்த குந்தான் பெரும்பாலான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் தமிழக மண்ணில் தவம் இயற்றி, ஆசாரியர்களுள் தலைசிறந்து விளங்கிய குந்தகுந்தான் பெரும்பாலான நூல்கள், இன்னமும் தமிழில் வெளிவரவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குய செய்தியாகும்.

நான் அறிந்தவரை, பேராசியர் சக்ரவர்த்தி நயினார் அவர்களும் திரு. அனந்தநாத நயினார் அவர்களும் ஆசாரிய குந்த குந்தரைப்பற்றியும், திருக்குறளைப் பற்றியும், ஆராய்ச்சி செய்து நூல்களை வெளியிட்டுள்ளனர். அவர்களின் இவ்வறப்பணி மிகவும் போற்றுதலுக்குய ஒன்றாகும்.

மேலும் திரு. துரைசாமி ஜைன், தச்சாம்பாடி அவர்கள் 'நியமசார'த்தையும், திரு. மல்லிநாத சாஸ்தியார் அவர்கள் 'ரயணசார'த்தையும் தமிழில் வெளியிட்டுள்ளனர். அந்நூல்களின் முகப்பில் குந்த குந்தரைப்பற்றிய வரலாற்றையும் தந்துள்ளார்கள். குந்த குந்தர் எத்தனைபேர்? எங்கு, எப்போது தோன்றினர்? என்னும் தலைப்பில் 'தீர்த்தங்கர' இந்திமாத இதழைத்தழுவி திரு. சிம்மச்சந்திர சாஸ்தியார் அவர்களால், எழுதப்பட்ட ஒரு கட்டுரை 1990-ம் ஆண்டு, ஜூன் மாத முக்குடை இதழில் வெளிவந்துள்ளது. மந்தாலசா தோத்திரம் என்னும் தோத்திரத்திற்கு தமிழில் பொருள் எழுதி வெளியிட்டுள்ள, திரு. பரதசக்ரவர்த்தி சாஸ்தியார் அவர்களும் அப்புத்தகத்தின் இறுதியில் குந்த குந்த ஆசாரியான் கதை வரலாற்றை எழுதியுள்ளார். புலவர். திரு. தன்யகுமார் அவர்களும், மேலும் சில அறிஞர் பெருமக்களும் கூட அவ்வப்போது குந்தகுந்தரைப்பற்றிய செய்திகளை கட்டுரை மூலமாகவும், முன்னுரை வடிவிலும் தந்துள்ளனர்.


பழைய ஓலைச்சுவடி ஒன்றில் குந்த குந்தான் ப்ராப்ருதத்ரயத்திற்கு (ஸமயஸாரம், பிரவசனஸாரம், பஞ்சாஸ்திகாயம்) மணிப்ரவாள (தமிழும் சமஸ்க்ருதமும் கலந்த) நடையில் ஒரு சுருக்கமான உரை ஒன்று உள்ளது. அவை மூன்றும் வீடூர் திரு. ஏ. தர்மசாம்ராஜ்யம் அவர்களின் முழுமையான அற்பணிப்பு மற்றும் அயராத உழைப்பின் வாயிலாக அச்சேறியுள்ளன. அவருடைய இப்பெரும் சாதனையை சொற்களால் எடுத்தியம்ப இயலாது.

இவை அனைத்தும் பாராட்டுக்குயவைகள் என்றாலும் ஆசாரிய குந்த குந்தான் நூல்கள் அனைத்தும் அவற்றின் உரைகளோடு முழுமையாக வெளிவரவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

ஆசாரிய குந்த குந்தான் இப்பெற்றிய நூல்களையும், அவற்றின் உரைகளையும் அறிய விரும்பும் ஆர்வலர்கள் மூலநூல்களையும் அவற்றின் உரை நூல்களையும் பயிலவும். இனி, ஆசாரிய குந்த குந்தான் மேன்மைக்கு காரணமான சிறப்பு அம்சங்களைப் பற்றிப் பார்ப்போமாக.


www.jainworld.com