ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும், மகத்தான அவரது சிறப்பு அம்சங்களும்

4) ஏலாசாரியர்: இப்பெயரும், விதேஹ விஜயத்தோடு தொடர்புடையதேயாகும். ஆசாரிய குந்த குந்தர் பூர்வவிதேஹத்தில் எழுந்தருளியிருக்கும் ஸீமந்தர ஸ்வாமி ஸமஸரணத்தை அடைந்தபோது, 500 வில் (ஏறக்குறைய 2000 முழங்கள்) உயரம் கொண்ட மக்கள், 5 முழ உயரம் கொண்ட இவரைக் கண்டு வியக்கலாயினர். அவர்களுக்கு இவர் ஏலக்காய் போன்று காணப்பட்டாராம். அங்கிருந்த மன்னம் இவரை உள்ளங்கையில் ஏந்தி ஏலா ஏலா என்று பாராட்டி மகிழ்ந்தானாம். அது முதற்கொண்டு, அவர் ஏலாசாரியர் என அனைவராலும் போற்றப்பட்டார்.

தமிழக மக்கள் ஆசாரியஸ்ரீயை பெரும்பாலும் ஏலாசாரியர் என்றே அழைத்து வந்துள்ளனர். சில இடங்களில் ஏலாசாரியர் என்பதற்கு பதிலாக ஹேலாசாரியர் என்ற பாடபேதமும் காணப்படுகிறது. ஹேலா என்றால் தூக்குவதற்கு எளிது என்று பொருள். மற்றவர்களை அன்பாக விளிக்கவும் 'ஹேலா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விதேஹ க்ஷத்திரத்திலிருந்தவர்கள் குந்த குந்தரை எளிதாக தூக்கியதால் ஹேலாசாரியர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவர்கள் ஆசாரியரை அன்பாகவும் 'ஹேலா' என அழைத்திருக்கலாம். அடுத்ததாக வக்ரக்வர் என்ற பெயர் வரக்காரணம் என்ன என்பதைக் பார்போமாக.

5)  வக்ரக்வர் :'க்வா' என்றால் கழுத்து என்றும் 'வக்ர' என்றால் வளைந்த (கோணலான) என்றும் பொருள். ஆசாரிய ஸ்ரீ அளவற்ற ஆகமங்களைத் தொடர்ந்து ஓலைச்சுவடியில் எழுதிக்கொண்டிருந்தபடியால் அவரை அறியாமலேயே அவரது கழுத்து சற்று சாய்ந்து காணப்பட்டதாம். எனவே மக்கள் அவரை வக்ரக்வர் என்றழைக்கலாயினர்.

இவ்வாறு, ஆசாரிய ஸ்ரீக்கு வழங்கப்பட்ட ஐந்து திருப்பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் எடுத்துக்கூறப்பட்டன.

இனி, குந்த குந்தான் 'சாரண த்தி'யைப் பற்றி அறிவோமாக.

ஆசாரிய குந்த குந்தர் சாரண த்தி பெற்றவர் என்பதை பின்வரும் ஆதாரங்களைக்கொண்டு அறியலாம்.

ஆசாரிய குந்த குந்தர் சாரண த்தி பெற்றவர் என்பதை பின்வரும் ஆதாரங்களைக்கொண்டு அறியலாம்.


ஆசார்ய ஸ்ரீயின் ஷட்ப்ராப்ருதம் என்னும் நூலுக்கு ஸம்ஸக்ருத உரை எழுதியருளிய ஸ்ரீசுருதஸாகர சூ மோக்ஷபாகுட பிரசஸ்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


'பத்மநந்தி,. பிராஜிதேந சதுரங்குலாகாசகமனர்த்தினா பூர்வவிதேஹ,.'

அதாவது 'ஸ்ரீ பத்மநந்தியாகத் திகழும் (குந்த குந்தர்) நான்கு அங்குல (உயரத்தில்) ஆகாயத்தில் செல்லும் த்தியினால் பூர்வவிதேஹம்,. (அடைந்து)' என்று எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் அவர் நான்கு அங்குல உயரத்தில் ஆகாயத்தில் செல்லும் த்தியைப் பெற்றிருந்தார் என்பதும், அதன் மூலம் விதேஹம் சென்றார் என்பதும் நன்கு விளங்கும்.

மேலும் சோமசேனர் எழுதியருளிய புராணத்திலும் இதே கருத்தை வலியுறுத்தும் சுலோகம் உள்ளது. அதாவது-

குந்த குந்தமுனிம் வந்தே சதுரங்குல சாரிணம்
கலிகாலே க்ருதம் யேந வாத்ஸல்யம் சர்வ ஜந்துஷ

பொருள் :கலிகாலத்தில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியவரும், சதுரலங்குல சாரணருமான (நான்கு அங்குல உயரத்தில் செல்பவருமான) குந்த குநங்த முனிவரை வணங்குகிறேன்.

இதன்மூலம் ஆசாரியர் சதுரங்குல சாரணாத்தி பெற்றவர் என்பது புலனாகிறது.

இவற்றுடன் சிரவண பெளிகுள கல்வெட்டுகளும் ஆசாரிய ஸ்ரீ சாரண த்தி பெற்றிருந்தார் என்று பறை சாற்றுகின்றன.


சந்திரகி கல்வெட்டு எண்.105-ல் கூறப்பட்டுள்ளதாவது-

'.........கோண்ட குந்தோ யதீந்த்ர
ரஜோபிரஸ்ப்ருஷ்ட தமத்வமந்தர், பாயோபி ஸம்வ்யஞ் ஜயிதும் யதீச
ரஜ: பதம் பூமிதலம்விஹாய சசார மன்யே சதுரங்குலம் ஹ:


பொருள் : யதிகளுக்கு (முனிகளுக்கு) ஈசனாக விளங்கும் யதீந்திர குந்த குந்தர் அகத்திலும், புறத்திலும் தூசுகளை (மாசுகளை)த் தொடாத தூய்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் நிலப்பகுதியை விட்டு நான்கு அங்குல உயரத்தில் சஞ்சாத்தார் என்று எண்ணுகிறேன் என்பதாம்.

இதேபோல சிரவணபெளிகுள கல்வெட்டு எண்.40/60-ல்

தஸ்யான்வயே பூவிதிதே பபூவய பத்மநந்தி ப்ரதமாபிதான:
ஸ்ரீ கோண்டகுந்தாதி முனீஸ்வராக்யஸ் தத்ஸம்யமாதுத்கத சாரணர்த்தி:
 

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுலோகத்தின் பொருள்: பூவுலகில் புகழ்பெற்ற அந்த பரம்பரையில் பத்மநந்தி என்ற முதற்பெயரை உடையவரும், ஸ்ரீ கோண்டகுந்தர் முதலிய பெயர்களை உடையவரும், முனிவர்களுக்கு ஈசனாக (தலைவனாக) விளங்குபவரும், தமது ஒழுக்க நெறியால் உண்டான சாரண த்தியைப் பெற்றவருமானவர் தோன்றினார் என்பதாம்.

இவ்விரண்டு அதாரங்களையும் உற்று நோக்குகையில் அவர் துறவற ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார் என்பதும் அதன் பயனாக அவருக்கு சாரணாத்தி கிடைக்கப்பெற்றது என்பதும் நன்கு விளங்கும்.

மேற்கண்ட ஆதாரங்களின் வழியாக, ஆசாரிய குந்த குந்தர், சாரண த்தி பெற்றவர் என்ற கருத்து உறுதியாகிறது.

இனி ஆசாரிய குந்த குந்தான் மங்காப்புகழுக்கும், மகத்தான பெருமைக்கும் முக்கிய காரணமாகத் திகழும் விதேஹ விஜயத்தைப் பற்றிப் பார்ப்போமாக.


ஆசாரிய ஸ்ரீயின் விதேஹ விஜயமும் அதற்கான ஆதாரங்களும்:

மங்கலம் பகவான் வீரோ மங்கலம் கெளதமோகணீ
மங்கலம் குந்த குந்தார்யோ ஜைன தர்மோஸ்து மங்கலம்


என்ற இந்த சுலோகத்தில் இப்போதைய அற ஆட்சியர் பகவான் மகாவீரரை முதலிலும், சுருத படைப்பாளர் கெளதம கணதரரை இரண்டாமிடத்திலும் வைத்துப் போற்றியபின், மூன்றாமிடத்தில் ஆசாரிய குந்த குந்தரை வைத்து போற்றியுள்ளது ஆழ்ந்த சிந்தனைக்குயதாகும். ஆசாரிய குந்த குந்தருக்கு முன்பும் ஆசாரியர்கள் தோன்றியுள்ளனர். ஆகமங்களும் எழுதப்பட்டன. அப்படி இருக்க ஆசாரிய குந்த குந்தருக்கு இப்பெருமை கிடைக்க காரணம் என்ன? என்பதை ஆராய வேண்டும். மேலும் பிற்கால ஆசாரியர்களுள் பலர் தங்களை குந்த குந்தரோடு தொடர்புபடுத்திப் பார்க்கவே விரும்பியுள்ளனர். தாங்கள் குந்த குந்தர் பரம்பரை வழிவந்தவர்கள் என்றும், அவர் கூறிய கருத்தையே நாங்களும் கூறுகிறோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளனர். மேலும் ஜினாலயத்தில் ஜினபிம்பத்தை பிரதிஷ்டை செய்யும்போது பிம்பத்தின் கீழ் (பீடத்தில்) பிரதிஷ்டை திதி, பிரதிஷ்டாசாரியர் பெயர் முதலிய விபரங்கள் எழுதப்படுகின்றன. அப்போது, குந்தகுந்தாம்நாய (குந்த குந்த பரம்பரை) முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். வடநாட்டில் இன்றும் இம்முறை அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும்?

இங்கு, குந்த குந்தாசாரியர் ஆகமங்களைப் படைத்தது மட்டுமின்றி, சுவேதாம்பரர்களை வாதத்தில் வென்று திகம்பர தர்மத்தை நிலைநாட்டினார். அதனால்தான் அவருக்கு இவ்வளவு பெருமை கிடைத்தது எனில், இச்சாதனையை இவருக்கு முன்பும், பின்பும் தோன்றிய பல ஆசாரியர்கள் செய்து வந்துள்ளனர். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் மட்டும், அவரை இவ்வளவு பொய மகானாக, பல நூற்றாண்டுகளுக்குத் தலைவனாக, அவர் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக உயர்தியுள்ளன என்று கூறுவதற்கில்லை. மற்ற ஆசாரியர்களுக்கு இல்லாத ஏதோ ஒரு தனிச்சிறப்பு அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதுவே அவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்க வேண்டும். அது தீர்த்தங்கர கேவலி பகவானின் தாசனம் என்றே தோன்றுகிறது. இந்த ஐந்தாம் காலத்தில் கேவலிகளே தோன்ற இயலாத நிலையில் விதேஹம் சென்று அங்குள்ள கேவலியை தாசித்து வந்துள்ளார் என்றால் அது ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று கூற இயலாது. மேலும் கேவலி பகவானை நேராக (கண்கூடாக) தாசித்தல் சம்யக்த்துவத்திற்கும் (நற்காட்சிக்கும்), முக்திக்கும் காரணமாகும். கேவலி பகவானை தாசித்ததால் அவருக்கு ஆகமத்தில் தோன்றிய ஐயங்களும் நீங்கின. இது அவருக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகும். இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரும் தனிச் சிறப்பாகும். சாரண த்தியும் அவரது தனிச்சிறப்பில் அடங்கும். அவர் அனைவராலும் போற்றப்படுவதற்கு இவ்விரண்டுமே முதன்மைக் காரணங்களாகத் திகழ்கின்றன எனில் அது மிகையாகாது.

இனி, அவர் விதேஹம் சென்று கேவலி பகவானை தாசித்ததற்கான ஆதாரங்களைக் காண்போமாக.

ஆசாரிய குந்த குந்தர் விதேஹம் சென்று சீமந்த ஸ்வாமியை தாசித்து வந்தார் என்ற வரலாற்றுப் புகழ் மிக்கச் செய்தியை கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீ தேவசேனாசாரியார் தன்னுடைய தர்சனஸாரம் என்னும் நூலில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜஇ பஉமணந்தி ணாஹோ, ஸீமந்தர ஸாமிதிவ்வணாணே
ண விவோஹஇ தோ ஸமணா, கஹம் ஸமக்கம் பயாணந்தி


பொருள் : பத்மநந்திநாதர் (குந்த குந்தர்) ஸமந்தர ஸ்வாமி வாயிலாகப் பெறப்பட்ட திவ்ய ஞானத்தின் மூலமாக தெள்ளிய அறிவைத் தராமலிருந்திருந்தால் சிரமணர்கள் (முனிவர்கள்/சமணர்கள்) நல்வழியை எங்ஙனம் அடைந்திருக்க இயலும்?

இதன் மூலம் ஆசாரிய குந்த குந்தர் விதேஹம் சென்று சீமந்தர ஸ்வாமி என்ற பெயருடைய தீர்த்தங்கர கேவலியை தாசித்து, அவருடைய திவ்யத்வனியை கேட்டறிந்தார் என்பது உறுதியாகிறது. மேலும் இதன் காரணமாக அவர் சிரமண குலத்திற்கே நல்வழிகாட்டினார் என்பதும் புலப்படுகிறது. இவ்வாறு கேவலி பகவானின் தாசனம் அவருக்குக் கிடைத்த வரலாற்றுப் புகழ்மிக்க தனிச்சிறப்பாகும் என்பதில் ஐயமில்லை.

www.jainworld.com