Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
804.
வா¢சையில் சுருக்கி வையத்து உச்சியார் வடிவு தன்னைப்
 புருவத்தின் இடையின் மூக்கின் நுனியிற்றான் பொருந்த வைத்துத்
 தி¡¢வித யோகி னோடும் சென்றுவந் தாடும் சிந்தை
 உருவமற் றிதனை உன்ன வினைகள் ஏழு உடைந்தவன்றே.
சுக்கில தியான முறையால் மன மொழி செயல் அடக்கத்துடன் இந்தி¡¢ய விஷயங்களில் செல்லாது நிலைத்து, சித்த பெருமானின் வடிவத்தை அதாவது தூய ஆன்மத் தன்மையை புருவங்களின் மையத்தில் மூக்கின் முனையில் பொருந்தச் செய்து, அந்தக் கரணயோகத்துடன் உயர் மார்க்கத்தில் சென்று மகிழ்ச்சியெய்தி, மனம் அலையாது உறுதியாக ஒரு நிலை யெய்தி, தூய மும்முணி மயமாகி பாவிக்க, ஏழுவகைக்கொடிய வினைகள் ஒழிந்தன.

805.
மோகனீ யத்தி னோடும் முப்பத்தேழ் பகடி வீழா
 வேகயோ கத்தோ டொன்றா எழுந்தசுக் கிலத்தி யானம்
 வேகயோ கத்தின் ஈரெண் பகடிகள் வீழ்ந்த வெய்யோன்
 மேகயோ கத்தின் வீட்டின் வி¡¢ந்தன அனந்த நான்மை.
மிகச்சிறந்த சுக்கில தியானத்தில் பொருந்தியதால் சா¡¢த்ர மோகனீயத்துடன் முப்பத்தேழு கர்மங்கள் அழிய மேலும் உறுதியான சுக்கிலத் தியானத்தால் பதினாறு வினைகள் பறந்தோட அதே நேரத்தில் மேகக்கூட்டங்களிலிருந்து விடுபட்ட வெய்யவன் போல் அனந்த நான்மைகள் எய்தி ஒளி வீசினான்.

806.
வெய்யவன் எழலும் வையம் வியாபா¡¢ப் பதனைப் போல
 ஐயமில் அனந்த நான்மை எழுந்த அக்கணத்து வானோர்
 மையறு விசும்பை எல்லாம் மறைத்துடன் வந்து சூழ்ந்து
 பொய்யறு தவத்தி னானைப் புகழ்ந்தடி பரவ லுற்றார்.
பகலவன் உதித்ததும் உலகம் தொழில் பு¡¢யத் தொடங்குவது போல் குற்றமற்ற அனந்த நான்மைகள் தோன்றிய அக்கணமே, நால்வகை தேவர்களும் விண்மறையச் சூழ்ந்து விபாவ குணம் ஒழிய சுபாவ குணத்தில் பொருந்திய தவத்தோன் சக்ராயுத பட்டாரகரைப் புகழ்ந்து பரவலாயினர்.

807.
காதி நான்மை கடந்தோய்நீ கடையில் நான்மை அடைந்தோய்நீ
 வேதம் நான்கும் வி¡¢த்தோய்நீ விகல நான்மை இ¡¢த்தோய்நீ
 கேதநான்மை கெடுத்தோய் நீ கேடில் இன்பக் கடலோய்நின்
 பாத கமலம் பணிவாரே உலகம் பணிய வருவாரே
காதி வினைகள் நான்கினையும் வென்றவன் நீ, அனந்த நான்மையை அடைந்தவன் நீ, நான்கு அனுயோகங்களையும் அளித்தவன் நீ, நால்வகை ஞானங்களைக் கடந்தவன் நீ, நான்வகையான துன்பங்களை நீக்கியவன் நீ, நீயே முடிவற்ற இன்பக் கடலை எய்தியவன், உனது பாதத் தாமரைகளை வணங்குகின்றவர்களே பான்மையாளர்கள், அவர்களே காலப்போக்கில் உனது நிலையை அடையக் கூடியவர்கள்.

808.
பதினெண் குற்றம் அ¡¢ந்தோய்நீ பரம நான்மை அடைந்தோய் நீ
 இதம்எவ் வுயிர்க்கும் அளிப்போய்நீ இன்னாப் பிறவி எறிவோய்நீ
 கதமும் மதமும் காமனையும் கடந்து காலற் கடந்தோய்நின்
 பதபங் கயங்கள் பணிவாரே உலகம் பணிய வருவாரே.
மேலும், நீயே பதினெட்டு வகையான குற்றங்களைக் கெடுத்தவன், மிகச் சிறந்த அனந்த நான்மைகளை அடைந்தவனும் நீயே. நீயே அனைத்து உயிர்களுக்கும் அபயமளிப்பவன். துன்பமான சம்சாரப் பிறப்பைக் கெடுத்துவனும் நீயே. செற்றம், செருக்கு, காமம் இவற்றை ஒழித்து காலனையும் வென்றவனாகிய உனது பாத மலர்களைப் பணிவோர் உனது நிலையை எய்துவர்.

  சக்ராயுதன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page