Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
883.
அச்சுமுள் கொண்டு சுற்றும் அடித்திடும் வயிர ஆணி
 உச்சியுள் புடைத்தி ழுத்திட் டோடியங் கெறியும் கல்லால்
 கைச்சிலை கணையைக் கோத்துக் காதள வெய்த வாங்கி
 அச்சுறத் தோன்றும் இவ்வாறு இடும்பைகள் அனேகம் செய்தான்.
முள் நிறைந்த அச்சங்கரணைக் கொம்பால் உடல் முழுதும் அடித்தும், வலிமை மிக்க ஆணியைத் தலையில் அடித்து இழுத்தும், ஓடிச் சென்று கற்களால் எறிந்தும் வில்லில் அம்பைப் பூட்டி அதைக் காதுவரை இழுத்து எய்வான் போன்று பயங்கரமாக நின்றும், பலவித இடும்பைகளைச் செய்தான்.

884.
எ¡¢சொ¡¢ந் திட்ட வண்ணம் இவன்செய்த இடும்பை யெல்லாம்
 தொ¢வதொன் றின்றி நின்றுஅம் முனிவனும் பொறுத்துச் சிந்தைத்
 தருமநல்தியானத் தோடும் சென்றுதன் னுடம்பு நீங்கித்
 திருமலி உலகத் துச்சி சவ்வட்ட சித்தி புக்கான்.
வேடனால் இழைக்கப்பட்ட நெருப்பைக் கொட்டுவது போன்ற இத் துன்பங்களை எல்லாம் அறிதலின்றி ஆன்ம பாவனையில் அந்தக் காரணங்களை நிறுத்தி அம் முனிவன் 'வதைபா£ஷகஜயம்' செய்து தருமத்யானத்திலே பொருந்தி நின்று இறுதியில் உடலை நீத்து உகலத்துச்சியில் உள்ள மிகச் சிறந்த சர்வார்த்த சித்தி என்னும் விமானத்தில் தேவனாக அவதா¢த்தார்.

885.
முப்பத்து மூன்று தன்னால் முரணிய ஆழி காலம்
 முப்பத்து மூன்று ஆயிரம் இடை விட்டும் உண்ணா
 முப்பத்து மூன்று பக்கம் உயிர்ப்பிடை முடிவு பெற்றான்
 முப்பத்து மூன்று அதிச்சா ¡¢னையிலா முனிவன் தானே.
முப்பத்து மூன்று பிராயச் சித்தங்களை இடையூறு இன்றி முடித்த அம் முனிவன் முப்பத்து மூன்று கடற்கால ஆயுளைப் பெற்று, முப்பத்து மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மனதால் அமுதம் உண்டு பதினாறரை மாதத்திற்கு ஒரு தடவை மூச்சுயிர்த்து அமர வாழ்வெய்தினான்.

886.
அவதிகள் விமானத் தின்கீழ் நாழிகை அளவும் செல்லும்
 உவதிகள் யாது மின்றி ஒப்பிலா உருவத் தாலே
 சிவகதி யாரைப் போல இன்பத்துச் செறிந்தி ருந்தான்
 தவநெறி நின்ற வீரன் தன்மையார் அறிய வல்லார்.
அத்தேவனுடைய அவதி ஞானம் அவனுடைய விமானத்திற்குக் கீழே 'திரச நாளி' முழுமையும் அறிய வல்லது. மகளிர் தொடர்பின்றி இணையற்ற தேவ உருவத்தால் ஏறக்குறைய வீடுபெற்றவர், எய்தும் இன்பத்தில் சேர்ந்திருந்தான். தவ நிலையில் தளர்வின்றி கொடுந்துன்பங்களைப் பொறுத்துக் கொண்ட அம் மாமுனிவனுடைய தன்மையை அறிய வல்லார் யார்.

887.
கூன்சிலைப் பகழி கோத்துக் கொடியவன் குழைய வாங்கி
 மான்களும் மரையும் வீழ்த்து முனிவனை வருத்திப் பாவி
 தான்சில நாளில் ஏழா நரகத்தைச் செறிந்து காட்டில்
 தேன்சுடு தீயின் ஈப்போல் திகைத்துப்போய் நிலத்து வீழ்ந்தான்.
வில்லை வளைத்துக் கணைகளைத் தொடுத்து மான்கள், மற்றும் சமா£ போன்ற விலங்குகளைக் கொன்று குவித்து, மாமுனிவரையும் கொடுமையாக வருத்திய அந்தப் பாபியாகிய வேடனின் ஆயுள் ஒழிய ஏழாவது நரகத்தில் ஆழ்ந்து காட்டுத் தீயில் வீழ்ந்த தேனீப் போல் மயங்கி நரகத்தின் மேல் பகுதியிலிருந்து தலைகீழாக வீழ்ந்தான்.

  வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page