Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
447.
உருவமும் அழகும் நல்லொளியும் கீர்த்தியும்
 செருவிடை வெல்வலத் திறலும் சிந்தை செய்
 பொருளவை வருதலும் போகமும் நல்ல
 திருவுடை அறத்தது செய்கை என்றனன்.
மேலும் வடிவம், வனப்பும், நல்ல பொலிவும், புகழும், போர்களத்தே பகைவரை வெல்லும் ஆற்றலும், விரும்பிய செல்வங்கள் வந்து சேர்வதும், இன்பமும் ஆகிய இவையனைத்தும் மிகச்சிறந்த அறத்தினது ஆற்றலால் ஆகக்கூடியவை என்பதையும் எடுத்துரைத்தேன்.

448.
நிலத்திடை அங்குரம் வித்தை நீத்திலை
 மலைத்தலை மழையிலாது ஆறுதான் வரா
 புலத்திடை இன்பமும் இல்லை புண்ணியம்
 தலைத்தலை வரச் செயாதவர்கட் கென்றனன்
அடுத்து, விதை நிலத்தில் விதைகளை விதைத்தாலன்றி பயிர்கள் தோன்றுவதில்லை. மலை முகடுகளில் மழை பெய்தால் தான் நீர் அருவிகள் கொட்டும், இவற்றைப் போல் புண்ணியத்திற்குக் காரணமாகிய விரத சீலங்களை வாய்க்குந் தோறும் செய்யாதவர் கட்கு ஐம்புல நுகர்ச்சியை அளிக்கும் இல்லற இன்பமும் இல்லாது போகும் என்றும் கூறினேன்.

449.
காரணம் இல்லையேல் இல்லை கா¡¢யம்
 போரணி வேலினாய் முன் செய் புண்ணியம்
 காரணமாக நீ ருடுத்த கன்னியும்
 சீரணி செல்வமும் செறிந்த உன்னையே.
போ¡¢லே வெற்றியைத் தருகின்ற அழகிய வேலினையுடைய வேந்தனே, காரணமில்லாமல் எந்த ஒரு செயலும் இல்லை. எனவே நீ முற் பிறவியில் செய்த புண்ணியத்தின் காரணமாகத் தான் இப்போது கடல் சூழ்ந்த இவ்வுலக ஆட்சியும் சிறப்புமிக்க செல்வமும் உனக்கு¡¢யதாக அமைந்துள்ளன.

450.
மண்ணின் மேல் மற்றிந்தச் செல்வம் மேல்வர
 எண்ணி நீ புண்ணியம் ஈண்டச் செய்கெனப்
 புண்ணின்மேல் பட்டவேல் போல அச்சொலை
 எண்ணிடாது இகழ்ந்தவன் எழுந்து போயினான்.
எனவே மேலும் மேலும் இவ்வாட்சியும் செல்வமும் நிலைத்துப் பெருக வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்து அதற்கான புண்ணியத்தைப் பு¡¢வாயாக என நான் கூறியதைக் கேட்ட பூரணச்சந்திரன், புண்ணில் வேட் பட்டதைப் போல் வேதனை அடைந்து எனது அறிவுரையைப் பற்றிச் சிந்திக்காது இகழ்ந்து எழுந்து சென்றுவிட்டான்.

451.
புலங்கள்மேல் பு¡¢ந்தெழு பொறிகள் ஓம்பியே
 விலங்கு போலே அவன் வீய்ந்து போகுமோ
 இலங்குசெம் பொன்னெயில் இறைவன் நல்லறத்து
 அலங்கல் வேலான் அவன் அடையுமோ சொலாய்.
எனவே, முனி புங்கவனே! அவன் ஐம்புல சையில் ழ்ந்து மிக்க விருப்புடன் ஐம்பொறிகளின் உணர்வினைப் பூர்த்தி செய்து விலங்குகளைப் போல் வீணாக மாய்ந்து விடுவானோ, அல்லது ஒளிமிக்க பொன் மதில்களால் சூழ்ந்த சமவசரணத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனது நல்லறத்தினை, அழகிய மாலையை அணிந்து வேலை ஏந்திய அவன் ஏற்பானோ எனக்குக் கூறுங்கள் என வேண்டினாள்.

  பூரண சந்திரன் அரசியற் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page