Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
554.
அவதியால் நரகமா றாவ தாய்ந்திடா
 யுவதியால் வரும்பயன் ஒன்று மின்றியே
 சிவகதி யவர்க்குப்போ லிவர்க்கு நல்வினை
 அவதியி னுதயத்தால் ஆகு மின்பமே.
அந்த அமரன் நல்வினைப் பயனால் ஆறாவது நரகம் வரை அறியும் ஓதியைப் பெற்றவன், அழகிய இளம் பெண்ணின் தொடர்பே இல்லாதவன், இணையற்ற அவதி ஞானப் பயனால் சித்தர்களைப் போன்ற இன்பத்தை எய்தியிருந்தான். (இவை அகமிந்திர தேவர்களின் இயல்பாகும்).

555.
அஞ்சிறப் பயர்வுழி அறிவனா ணையால்
 அஞ்சிரண் டடிநடந் திறைஞ்ச லல்லது
 அஞ்சிவந் தொருவர்தம் ஆணை யிற்செலார்
 அஞ்சொலார் இன்மையா ரகநல் லிந்திரர்.
பெண்களே இல்லாத அகமிந்திர உலக தேவர்கள் அருகப்பெருமானுக்கு கல்பவாசி தேவர்கள் இயற்றும் பஞ்சகல்யாணப் பெருஞ்சிறப்பினை ஆற்றுங்காலத்தும், இறைவனது பெருமைக்கேற்ப தமது இடத்தைவிட்டு ஏழடி நடந்து சென்று அங்கிருந்தே திசைநோக்கி வணங்குதலன்றி, யாருடைய ஆணைக்கும் கட்டுப்பட்டு எங்கும் செல்லமாட்டார்கள். இதுவும் அகமிந்திரர் இயல்பாகும்.

556.
இன்பமே இடையறா தெழுத லல்லது
 துன்பமும் கவலையும் தோகை யன்னவர்க்கு
 அன்புநண் பும்இலா அகமிந் திரத்தவன்
 முன்புபின் பழிந்தெய்தா மூர்த்தி யாயினான்.
அகமிந்திர உலக தேவனாகிய அவன் இடையறா இன்பத்தை எய்தியதால் உடல் துன்பமோ, மனக்கவலையோ இல்லாதவன், மயில் போன்ற அழகிய மாந்தர்கள் தொடர்பே இல்லாததால் அவரால் எய்தும் அன்பு, ஆசை அற்றவன்; இறுதி வரை ஊறு அடையாத ஒப்பற்ற உடலையுடையவன்

557.
அருந்தவம் பொருந்திய சீல மாதியால்
 திருந்திய நால்வருந் தேவ ராயினார்
 பெருந்துயர் விலங்கிற்றீ வினையில் வீழ்ந்துபின்
 பொருந்தினான் நிரயத்துப் பூதி போகியே.
அறிய தவத்தினாலும் அதற்கான ஒழுக்கம் முதலியவற்றாலும், நல்வழிப்பட்ட நால்வரும் அதாவது சிம்மசேன மன்னன், அவன் தேவி இராமதத்தை மக்கள் சிம்மசந்திரன், பூரணச்சந்திரன் ஆகியோர் தத்தம் நிலைக்கேற்ப விண்ணுலக வாழ்வை அடைந்தார்கள். அமைச்சன் சத்தியகோடன் தனது தீவினைப் பயனால் துயர்மிக்க விலங்குப் பிறவிகளை எய்தி முடிவில் கொடிய நரகம் அ

558.
பகைவனும் தனக்குத் தானே பாவங்கள் பயின்று சொல்லி
 நகையமை நண்பு தானே நல்வினைக் கேது வாயிற்
 பகையுற விரண்டும் பாவ புண்ணியப் பயன்க ளாதல்
 இகன்மத யானை பாந்தள் இரண்டினும் தெளிந்த தன்றே.
பகையுணர்வோடு சிந்தித்து செயல்படுவதால் தனது ஆன்மாவிற்கு தானே பகைவனாக அமைந்து பாவத்தை சேர்ப்பதும், இனிமை மிக்க நட்புணர்வோடு அமைதல் புண்ணியத்தை எய்தவும் காரணமாகின்றது; பகையும், நட்பும் பாவ புண்ணிய பயன்களாகும். இதன் உண்மையை , வலிமை மிக்க அசனிகோடம் என்னும் யானை, கோழிப்பாம்பு இவற்றின் தன்மைகளால் அவை எய்திய பயன்கள் மூ

  நால்வரும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page