Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
349.
ஊனொடு தேனும் கள்ளும் இன்றி நன்றாய உண்டி
 தான் உவந்து எவர்க்கும் ஈதல் தானமாம் தானும் மூன்றாம்
 ஊன் உணும் கொடுமையார்க்கும் உடன்பட்டும் ஊன் உணார்க்கும்
 மானமாதவர்க்கும் ஈதல் வா¢சையால் பெருகும் மூன்றும்.
ஊன், தேன், கள் இவை மூன்றும் கலவாத தூய உணவை மிக மகிழ்ச்சியோடு பிறர்க்கு அளித்தல் ஆகாரதானம் எனக் கூறப்படும். ஊன் உண்பார்க்கு அளித்தல், ஊன் உண்ணாதவர்களுக்குக் கொடுத்தல் பெருமை மிக்க மாமுனிவர்களுக்கு வழங்குதல் என்பன; இவை, கடையாய தானம், இடையாய தானம், தலையாய தானம் எனக் கூறப்படும். (இங்கே கடையாயதானம் ஊன் உண்பார்க்கு அளித்

350.
புலைசுண்பான் உண்ட உண்டி வலியினால் உயிரைப் போற்றின்
 மலையினும் பொ¢ய உண்டி வலியினால் உயிரைச் சால
 நலியுமேல் நரகத் தாழ்ந்து நடலைகள்படும் என்றால் இப்
 புலைசுண்பார்க்கு உண்டி ஈதல் நன்றுமாம் அன்றுமாமே.
இங்கே, ஊண் உண்பவர்களுக்கு அளித்த உணவின் ஆற்றலால் (உணவை ஏற்ற கடைநிலைதானத்திற்கு¡¢யவன்) பிறஉயிர்களிடம் கருணை கொண்டு உதவிபு¡¢வானாயின், அவனுக்கு உணவளித்தவனுக்குச் சிறந்த புண்ணியமாகும். அதைவிடுத்து உண்ட வலிவினால் பிற உயிர்களை வருத்துவானாயின் உணவளித்தவனுக்கு நகரம் செல்லக்கூடிய பாபம் வந்து சேரும். எனவே கடைநிலை தானத்தின

351.
அகதிகள் அறத்தின் நின்றார் அரும்பிணியாளர் மூத்தார்
 குகதிகள் குருடர் மூகர் கொலைத் தொழில் மனத்தும் இல்லார்
 அகல்கையில் ஏந்தினோருக்கு அருளினால் ஈந்த உண்டி
 மகா¢கை மலிந்த பூணோய் மத்திம தானமாமே.
மகரகண்டிகையை அணிந்த பத்திரமித்திரனே! வறுமை எய்தியோர், விரதங்கள் ஏற்ற அற உணர்வுடையோர், கொடிய பிணியாளர்கள், முதியவர்கள், உறுப்பு ஊனமுற்றோர், குருடர், ஊமை போன்றோர், உயிர்களுக்குத்துன்பம் செய்ய மனத்தாலும் நினையாதவர்கள், பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுப்போர் ஆகிய இவர்களிடத்து அருள் கொண்டு அளித்த தானம் இடைநிலை தானம் எ

352.
352. உறவியைப் பொ¢தும் ஓம்பி ஒழுக்கத்தை நிறுத்தி உள்ளம்
 பொறிவழி படர்ச்சி நீங்கிப் பிறர்க்கு நன்று ஆற்றிப் பொய்தீர்
 நெறியினைத் தாங்கி நீங்கா வீட்டின்பம் விழைதல் செய்யும்
 உறுதவர்க்கு ஈந்த எல்லாம் உத்தம தானமாமே.
மேலும், அனைத்துயிர்களிடத்தும் அருள் கொண்டு தவ ஒழுக்கத்தில் தளராது நின்று, ஐம்புலவழிகளில் மனம் செல்லாது தடுத்து அனைவருக்கும் நன்மையே பு¡¢ந்து குற்றமற்ற மெய்ந்நெறியினை அதாவது மும்மணிகளை ஏற்று, எப்போதும் நீங்கா வீட்டின்பத்தை விரும்பும், மிகச் சிறந்த தவ முனிவர்களுக்கு வழங்கிய தானம் உத்தம தானம் எனப்படும்.

353.
ஊனொடு தேனும் கள்ளும் உவந்தவை பிறவும் ஈதல்
 தானமென் றுரைத்துத் தம்மைக் கொன்று உயிர்க்கு ஊனை ஈவார்
 தானமும் தயாவும் எல்லாம் தாம் கண்டவாறு காண்க
 ஈனமென்றாலும் கேளார் இயல்புவேறு லகத்தாரே.
ஊன், தேன், கள் இவற்றுடன் தாங்கள் விரும்பும் மற்றவைகளையும் சேர்த்துக் கொடுப்பதுதான் தானம் என்றும், தேவைப்பட்டால் தனது உடல் உறுப்பினையோ, அல்லது தன்னையோகொன்று தனது ஊனை மற்றவர்க்கு அளிக்கவும் துணிந்தவர்கள் தங்கள் மனம்போல் தானம் செய்து, பிறர்பால் அன்பு கொள்வது இவையெல்லாம் அவரவர் விருப்பப்படியே இருக்கும். மற்றவர்கள் இது அறமல்ல என்று எ

  பத்ரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page