Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
131.
அறிவு நீயிலை ஒன்றலது எமக்கவை அனேகம்
 பிறவி நீயிலை யாங்களோ பிறவியிற் பொ¢யோம்
 செறிவதோர் கதிஉனக்கிலை எமக்கு நான்கிவற்றால்
 வறியை நீஎம்மை ஆட்கொண்ட வசியிது பொ¢தே.
கடையிலா அறிவு என்னும் ஒரே அறிவினை நீ பெற்றுள்ளாய். மதி, சுருதி என்னும் பல்வேறு அறிவினை நாங்கள் பெற்றுள்ளோம்; பிறப்பு என்பதே உனக்கில்லை. கணக்கற்ற பிறப்புக்கள் எங்களுக்குண்டு; உனக்கு வேறு கதியில்லை எங்களுக்கு நால்வகை கதிகள் காத்திருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது எங்களைக் காட்டிலும் நீ தான் வறியவன். இருந்தாலும் எங்

132.
என்று வானவர் இறைவனை இறைஞ்சும் அப்பொழுதே
 அன்று மூவுல கத்துள அமரரும் வியப்ப
 நின்றதோர்படி நிருமியா அ¡¢வையர் சூழச்
 சென்ற னன்தர ணேந்திரன் சிறப்பொடும் விரைந்தே.
என்று இவ்வாறு பலவகையாக விண்ணவர் போற்றிப் புகழும் சமயத்தில் மூவுலக தேவர்களும் வியக்கும் வண்ணம் ஒப்பற்ற தனது பொலிவுமிக்க தோற்றத்தை மேலும் அழகு செய்து கொண்டு மனைவியர் புடைசூழ தரணேந்திரன் என்னும் பவணலோகத்துத் தேவன் பூசைக்கு¡¢ய பொருளுடன் அங்கு வந்தடைந்தான்.

133.
நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனி நிறைமதி முகமும் செம்பொன்
 கழலணிந்து இலங்கும் பாதம் கமலங்கள் காம னேயும்
 குழலணிந்து இலங்கு நல்லார் வடிவினால் குழைய வாங்கும்
 தழலுறும் தன்மைத்து அந்தத் தரணனது உருவு தானே.
ஒளி வீசுகின்ற காமனுக்கு நிகரான உடலழகும், முழுமதி போன்ற முகமும் தாமரை மலர்களுக்கு நிகரான செம்பொன் கழலணிந்த பாதங்களும் உடைய தரணேந்திரனது தோற்றம் அழகான ஒப்பனை செய்த கூந்தலையுடைய எழில் மங்கையா¢ன் உள்ளங்களை ஈர்க்கும் தன்மையுடையதாகும்.

134.
ஆங்கு அவன் உருவம் காணா அருந்தவன் சயந்தன் அந்தேர
 வீங்கிய தவத்தி னால்மேல் இவ்வுரு வாக என்னா
 நீங்கிய காட்சித் தாய நிதானத்தை நிறைய நின்றான்
 ஓங்கிய உலகம் வேண்டாது உமிகொண்ட ஒருவன் ஒத்தான்.
அங்கு அவ்வாறு தோன்றிய தரணேந்திரனது அழகிய தோற்றத்தைக் கண்டவுடன் தவக்கோலத்திலிருந்த சயந்த முனிவன் மயங்கி எனது சிறந்த தவப் பயன் இத்தகைய எழில் மிக்க உருவத்தை அடுத்த விறவியில் பெற வேண்டுமென்ற நிதானமுடையவனாய், தான் இதுகாறும் போற்றிய நற்காட்சி முதலியவற்றைத் துறந்தவனாய், மேன்மைமிக்க வீட்டுலகை வேண்டாதவனாய் உமியை விரு

135.
அருந்தவம் தாங்கி மேரு அனைவர்க்கு ஏலும் ஆசை
 துரும்பிடைத் தோன்று மேனும் துகளினும் சிறிய ராவர்
 அருந்தவன் இவனிற் கண்டாம் ஆசைஇல் லாமை யன்றோ
 பெருந்தவம் ஆத லன்றேல் பிறவிவித் துலர்த்த லன்றே.
அ¡¢ய தவத்தை ஏற்று மேருமலைக்கு நிகராக விளங்கியவராயினும் அவா¢டம் துரும்பை விரும்பக் கூடிய சிறு ஆசை தோன்றுமாயின் அக்கணமே அவர்கள் அணுவினும் சிறிய அற்பராவார்கள்; இத்தகைய இழி நிலையை அருந்தவ முனிவராகிய சயந்தனிடத்திலே கண்டோம். பெருந்தவம் என்பது ஆசையற்ற நிலையல்லவா? இதை விடுத்துச் சிறிய ஆசையே தோன்றினும் அது பிறவிக்

  வைசயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page