Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
11.
மணிநல வைரம் பைம்பொன் வரன்றிமா திரையும்சந்தும்
துணிநல வகிலும் கொம்பும் தோகையும் மயிரும்ஏந்தி
வணிகநல் லொருவன்போல வயலக மடுத்தவாறு
பணிவிலாப் பழங்கொள் தெங்கின் இலையெனப் பரந்ததன்றே.
அந்நாட்டில் ஓடிய நதியானது தனது பொ¢ய அலைகள் மூலம் மணிகளையும், பொன்னையும் சந்தனக் கட்டைகளையும், யானைத் தந்தங்களையும், மயில் தோகைகளையும், கவா¢மானின் நீண்ட மயிர்களையும் வா¡¢க்கொண்டு ஓர் ஒப்பற்ற வணிகனைப்போல் வயலிடத்தைச் சேர்ந்து தென்னை ஓலையைப்போல் பல பி¡¢வாகப் பி¡¢ந்து பரவியது.

12.
குழைகளும் மலரும் செற்றிக்குயில்களும் மயிலும் ஆர்த்து
மழையென மதுக்கள் பெய்து வண்டொடு தும்பிபாடி
விழைவுறந்தகையவாகி வேண்டினார் வேண்டிற்றீயும்
அழகுடை மரங்கள் போன்ற அம்மலர்ச் சோலையெல்லாம்.
அந்த நாட்டின் அழகார்ந்த சோலைகள் எல்லாம் அழகிய தளிர்களாலும் மலர்களாலும் நிரம்பப்பெற்று மயில்களும், குயில்களும் தங்கிருக்க, மழை பெய்து தேன் சிந்த வண்டுகளும், தும்பிகளும் பாட அனைவரும் விரும்பும் வனப்புடையனவாகி விரும்பியவற்றைத் தருகின்ற கற்பக மரத்திற்கு நிகராக விளங்கின.

13.
மதியோடு மீன்கள் நீலமணிந்தலத்து இருந்த வேபோல்
பொதியவிழ் கமலம் ஆம்பல் பூத்தன பொய்கை எல்லாம்
மதிமிசைக் கறுப்பின் வெண்டா மரைமிசை வண்டின் பாடல்
மதியன்ன முகத்தின் நல்லார் வாய்ப்பண்ணின் எழுச்சித்தொன்றே.
நீர் நிலைகளிலெல்லாம் தாமரையும் அல்லியும் பூத்துக் கிடந்த தோற்றம் நீலமணி போன்ற வானத்தில் சந்திரனைச் சூழ்ந்த விண்மீன்களைப்போல விளங்கியது; தாமரை மலர்களில் தங்கிய வண்டுகளின் தோற்றம் சந்திரனில் காணும் களங்கத்தைப்போல் காட்சியளித்தது; வண்டுகளின் இனிய இசையானது முழுமதி போன்ற முகத்தினையுடைய அழகிய பெண்ணின் இசைப்பாடலை ந

14.
அன்னமென் குருகு தாரா நாரை வண்டானங்கோழி
துன்னினபெடைக ளோடும் துறந்தவும் அழைத்த தோற்றம்
இன்னா¢ச் சிலம்பின் நல்லார் சில்லா¢ சிலம்ப ஆடிக்
கன்னியாழ் பயிலும் சாலை போன்றன கயங்க ளெல்லாம்.
அழகிய அன்னம், குருகு, தாரா, நாரை, வண்டானம், நீர்க்கோழி ஆகிய பறவைகள் தத்தம் பெடைகளோடு கூடிக்களிக்கும்போது எழுப்பிய ஒலி அழகிய பெண்கள் ஆடுகின்றபோது அவர்தம் கால்களில் அணிந்திருந்த சிலம்போசையையும், மேலே சொன்ன பறவைகள் தத்தம் பெடைகளைச் சேர்வதற்காக அழைத்த குரலோசை இளம் பெண்கள் இசைத்த யாழ் ஓசையையும் ஒத்திருந்தன.

15.
சாலிகள் கரும்பிற் செற்றிச் சாலவும் உயர்ந்தது தம்மின்
மேலளவொத்துச் செம்பொன் வி¡¢ந்துடன் ஈன்று மேலோர்
காலுற வணங்குவா¡¢ற் கமலத்தின் இறைஞ்சிக் காய்த்த
நீலநல் பவழம் முத்தின் கழுத்தவாய் நிறைந்தபூகம்.
அந்த நாட்டிலே நெற்பயிர்கள் கரும்புக்கு நிகராக வளர்ந்து ஈன்று பொன்போன்று முற்றிய மணிகளையுடைய கதிர்கள் பொ¢யோரை வணங்குகின்றவர்களைப் போல ஓரத்திலுள்ள தாமரை மலர்களில் வளைந்து படிந்து காணப்பட்டன. முத்துப் போன்ற மலரும் நீலமணி போன்ற காய்களும், பவழம் போன்ற பழங்களுமுடைய பாக்கு மரங்கள் எங்கும் நிறைந்திருந்தன.

  வைசயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page