Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
940.
புகைஐந்து முதல்புரை புக்கவர்தாம்
 உகையார் விழுவார் உள ஆயுவெலாம்
 புகை ஏழொடு ஐஞ்ஞூறு வில்காவதம் மூன்று
 உகையார் விழுவார் முதல் ஈற்றினுளார்
முதல் நரகத்தில் முதல் புரையில் வீழ்ந்த நரகர்கள் தங்கள் ஆயுள் முடியும் வரை ஐந்து யோசனை உயரம் இடையறாது எழும்பி விழுவார்கள். பதின்மூன்றாம் புரைநரகர்கள் ஏழே முக்கால் வீசம் யோசனை உயரம் கிளம்பி கீழே விழுந்துகொண்டே இருப்பார்கள்.

941.
எழுவாய் அது இரட்டி இரட்டியதாய்
 வழுவாது இறுவாய் புரைதோறும் வரா
 எழுதா நரகத்து இயல்பாய் ஐஞ்ஞூறு
 ஒழியாது விழுந் தெழும் ஓசனையே
ஏழுமுறை அந்த ஏழேமுக்காலே வீசம் யோசனை இரட்டித்த இரட்டித்ததாகி,தவறாது கீழ்ப்புரைகள் தோறும் தொடர்ந்து ஏழாம் நரகத்தில் ஐந்ந{று வில் உயரம் எழும்பி விழுவது இயல்பாகும்.

942.
எறிவெம் படையால் இவர்வீழ்ந் தெழலால்
 உறுவெந்துயர் அல்லது உடம்பு விடார்
 கறுவாதி கடும் பா¢ணாமம் இடை
 எறியா வகை யுவை ற்றலினே.
மிக்க கொடிய வெப்பமான ஆயுதங்களினால் உடலைத் துண்டித்தலாலும் வீழ்ந்து எழுதலாலும் அடையும் கொடும் துன்பத்துடனும்,கடுமையான குரோத குணத்துடனும் தங்கள் ஆயுள்வரை அனுபவித்தே தீர்வர் இடையில் இறத்தல் என்பது இல்லை.

943.
வினையே துயரத்தை விளைப்பதலால்
 நினைவார் செயல் மற்றிலை நீடு உயிரை
 முனை மூட்டுவர் கீழுள தேவர் இவன்
 உனை முன்னின செய்தனன் என்றுரையா.
நரகத்தில் உழல்வோர் உயிரை,அவர்தம் கடும் வினைகள் இழைக்கும் துன்பங்கள் தவிர,அவர்கட்கு ஆறுதலோ,நல்லுரையோ அளிப்பா¡¢ல்லை - ஆனால் நேர்மாறாக பவண தேவர்கள் அங்கு சென்று நரகர்களைத்தனியே - சந்தித்து ஒருவருக்கொருவர் கலகத்தை மூட்டி,இவன் உன்னை முன்பிறவியில் இப்படி இப்படிச் செய்தான் என்று கூறி,பகையை வளர்த்துப் போ¡¢டச் செய்வர்.

944.
கணமும் இடையின்றி எழும் பசியால்
 உணவென்று எனவந்து உலகத்துள நஞ்சு
 இணையில் எனக்காய்ந்த இரும்பினை நீர்
 அணையும் படியால் அணையா அடுமே.
ஒரு விநாடி நேரமும் இடைவிடாமல் வாட்டும் பசியினால்,உணவு எப்போது கிடைக்கும் என எண்ணும் போதே அவ்வுலகத்து நஞ்செல்லாம் திரண்டு வந்து காய்ந்த இரும்புண்ட நீர்போல்,உடலில் இரண்டறக் கலந்து வாட்டும்.

  நிரையத்துள் அறவுரைச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page