Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
980.
வந்து இந்தப் பரதத்தின்கண் பூதரமண வனத்தில்
 அந்தரத்து அணியில் செல்லும் நதி அயிராவதியின்
 தன்கரைத் தாபதற்குத் தலைவன் கோசிருங்கன் பன்னி
 மந்தம் சேர் சங்கி மைந்தன் சிருங்கம்சேர் மிருகனானான்.
இந்தப் பரதகண்டத்தில் பூதரமணமென்னும் காட்டின் நடுப்பகுதியில் அழகுடன் ஓடும் ஐராவதி ஆற்றின் கரையில் தங்கியிருக்கும் தாபதர்களின் தலைவன் கோசிருங்கனுக்கு அவன் மனைவி சுங்கிக்கும், மிருகசங்கன் என்னும் மைந்தனாகப் பிறந்தான்.

981.
பரல்மிசைக் கிடந்தும் முள்ளின் பலகையில் துயின்றும் பஞ்ச
 எ¡¢நடுப் பகலின் நின்றும் இராவகம் வருடம் புக்கும்
 கரையுடை மடையிற் சேர்ந்தும் கலையின் பின் ஓடிக்காமத்து
 உரையுடை அவா¢ல் சீத குடங்களைத் தழுவித் தோளால்
அவன் பருக்கைக் கற்களின் மேல் படுத்தும், இரும்பு முட்பலகையில் தூங்கியும், நடுப்பகலில் பஞ்சாக்னியில் நின்றும், நள்ளிரவில் பெய்யும் மழையில் நின்றும் அல்லது ஓடும் நீ¡¢ல் நிலைக்க நின்றும், மான் கூட்டங்களைத் தொடர்ந்து ஓடியும், காம உணர்வுடையவர்களைப்போல் குளி¡¢ல் நீர் நிறைந்த குடங்களைத் தனது தோள்களால் தழுவியும் -

982.
தூங்கும் உறிகிடந்தும் நல்லார் தோளினைப் புணர்ந்தும் தூய்மை
 வாங்கிய தவத்தில் செல்வான் வானத்து ஓர்விஞ்சை வேந்தன்
 தீங்கிலா விஞ்சுமாலி திவி திலகத்து நாதன்
 ங்கு வந்தவனைக் கண்டு ஆங்கு அண்ணைதான் நிதானம் செய்தான்.
தொங்கும் உறியில் உட்கார்ந்தும், பெண்களின் தோள்களைக் காமத்தால் தழுவியும், தூய்மையற்ற தீய தவத்தை மேற்கொண்டவன் விண்வழியாக அங்கு வந்த திவிதிலகமென்னும் நகரத்தின் தலைவனும், நற்குணமுடைய வித்யுன்மாலினி என்னும் பெயருடைய விஞ்சையனைக்கண்டு அக்கணமே தான் அவனைப்போல் கவேண்டுமென்று நிதானம் கொண்டான் (ஆசைப்பட்டான்).

983.
மற்றுஇவன் தனக்குப்போல் தவத்தின்மேல், எனக்கு வந்துஇச்
 சுற்றமும் செலவும், வேந்தும் தொக்குடன் நிற்க என்றுஇப்
 பெற்றியை நினைத்துச் சென்றப் பிறப்பின் கண் நீங்கி வெள்ளி
 வெற்பின் கண் வடக்கில் சேடி கனகபல்லவந்து வேந்தன்.
இந்த விஞ்சையனுக்கு அமைந்த வைபவம் போல் என் தவப்பயனால் எனக்கும் அடுத்த பிறவியில் கிடைக்க வேண்டும்; சுற்றமும் சேர வேண்டும். விண்ணில் செல்வதும், அரச பதவியும், ஒருங்கே எனக்கு அமைய வேண்டும் என்னும் சிந்தனையோடு தியானம் செய்து தவமியற்றி, பிறகு அப்பிறவி நீங்கி விஜயார்த்த மலையில் வடசேணியில் கனகபல்லவம் என்னம் நகரத்துக்கு விஞ்சையர் வேந்தனாக அவதா¢த்தான்.

984.
வச்சிரதந்தனுக்கும் மாதர்வித்துப் பிரபைக்கும்
 இச்சையால் தோன்றி வித்துத்தந்தன் என்று இயம்பப்பட்டான்
 வச்சிரப் பிளவு போலும் வேரத்தால் வந்த பாவத்து
 இச்செய்கை முனிக்குச் செய்தான் இவன் அந்த அமைச்சன் கண்டாய்
வச்சிரதந்தன் என்னும் வித்யாதரனுக்கும் வித்துப்பிரபை என்னும் பட்டத்தரசிக்கும் ஆசை மகனாகத் தோன்றி, வித்துத்தந்தன் என்னும் பெயர் பெற்றனன். கடிய கற்பிளப்பு போன்ற வைர பாவத்தால் உண்டான தீவினை உதயத்தால் இந்தச் சஞ்சயந்த மாமுனிவருக்கு இத்தகு கொடுமைகளை வித்துத்தந்தன் இழைத்தனன். இவன்தான் பல பிறவிகளுக்குமுன் சிம்மசேன அரசனுக்கு அமைச்சனாகிய சீபூதி யாவான் என்பதை அறிவாயாக.

  பிறவி முடிச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page