Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1021.
கடைந்தநல் அலகு அம்பென்னக் கறுத்திடை வெளுத்துச் சூழ
 மடங்கல் போல் மொய்ம்பின், மைந்தர் மனத்தினைக் கணத்து அழிக்கும்
 தடங்கண் அம்பாக நல்லார் தனுவில் நாணேற்றித் தான் அங்கு
 அடங்கி நின்று அனங்கன் மைந்தர் உள்ளத்தே அழிக்கலுற்றான்
கடைந்தெடுத்த கூ¡¢ய அம்புபோன்று, இடை கருத்து சூழ வெளுத்திருப்பதும், சிங்கம் போன்ற வீரம்மிக்க இளைஞர்களின் மனதை ஒருகணத்தில் மயக்கக் கூடியதுமான அழகிய பெண்களின் கண்களாகிய அம்பினை, அவர்தம் புருவ வில்லிலே பூட்டி, காமன், அந்த இளைஞர்களின் உள்ளத்தைக் கெடுத்துத் தன் வயப்படுத்தலுற்றான்.

1022.
கைச்சிலை குழைய வாங்கிக் கணை மழை பொழிந்து காமத்து
 இச்சையை மைந்தர் உள்ளத்து எழுத்தமாட்டாது அனங்கன்
 வச்சிரம் பஞ்சில் துய்யா வடுப்படுமேனும் காமத்து
 இச்சையை, மைந்தர் உள்ளத்து எழுத்தொணாது என்று போனான்.
காமனானவன் தனது வில்லினை நன்கு வளைத்து மலர்க் கணைகளைப் பொழிந்தும் அவர்கள் உள்ளத்தில் காதலை வளர்க்முடியாத தோற்றான் - பஞ்சுப்பொதியினை வச்சிராயுதம் துண்டித்தாலும் துண்டிக்கும், இவர்தம் உள்ளத்தில் காம உணர்வை எழுப்புதல் இயலாதென்று பின்னடைந்தான். (அதாவது இருவரும் உறுதியுடன் பெண்ணாசை தோன்றாது இருந்தனர்.)

1023.
காயத்தின் உவர்ப்பும் காம போகத்தின் வெறுப்பும் மாற்றாம்
 மாயத்தின் வடிவும் எல்லாம் நினைப்பிலா மனத்தினார்கள்
 நோய்ஒத்த, நுகர்ச்சி செல்வம் நுரைஒத்த, இளமை தேசு
 காயத்து வில்லைஒத்த, காமனுக்கு இடம் அங்குண்டோ.
உடலினுடைய வெறுக்கத்தக்க இயல்பினையும், சிற்றின்பம் அளிக்கும் காமத்தின்பால் வெறுப்பும், இல்லறத்தின் நிலையற்ற தன்மையையும் நன்குணர்ந்து அதனால் வைராக்கியமடைந்த மைந்தர்கள், ஐம்பொறி இன்பங்கள் கொடிய வியாதிக்குச் சமமானது; செல்வத்தின் நிலை நீ¡¢ல் திரளும் நுரை போன்றது; இளமையும் உடல் அழகும் வானத்து வில்லைப் போன்றவை, இத்தகு சிந்தனைகளையுடைய அவர்தம் உள்ளத்தில் மன்மதனுக்கு இடமுண்டோ?

1024.
அனித்தம், அரணின்மை, உறவின்மை, பிறிதின்மை
 உனற்கா¢ய மாற்று, உலகம், ஊற்றுதரல், உவர்ப்பு
 நினைப்பில்வரும் செறிப்பு, உதிர்ச்சி, போதி பெறற்கு அருமை
 மனத்தின்வரல் நினைத்து மனையறத்து ஒழுகும் வழிநாள்
உடல் முதலிய அனைத்தும் நிலையற்றவை. உற்றார் உறவினர் யாரும் பாதுகாப்பாகமாட்டார்கள், எனக்கு நானே துணை பிறர் அல்லர், எண்ணற்கா¢ய சாரமற்ற சம்சாரத் தன்மையையும், இவ்வுலக இயல்பினையும், வினைகள் உயி¡¢டத்து வரும் ஊற்றினையும், உடலின் அருவருக்கும் தன்மையையும், எண்ணங்களால் வரும் வினைகளைத் தடுத்தலையும், எண்ணங்களால் வரும் வினைகளைத் தடுத்தலையும், வினைகளை உதிர்க்கும் தன்மையையும், உண்மையான நற்காட்சி முதலியவற்றைப் பெறற்கருமையையும் ஆகிய இப்பன்னிரண்டினைக் குறித்து இடையறாது சிந்தித்து இல்லறத்தே அவர்கள் வாழும் காலத்தே.

1025.
அமலநல ஆடிஅகத்து ஆனநிழல்போல
 துமிலமிடை மூவுலகும் தோன்றும் அறிவுடைய
 விமலன் எனும் அறிவன் மலர்மழை பொழிய விண்ணோர்
 கமலம் மிசை உலவிஒரு காவகம் அடைந்தான்
தூய்மையான கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல், பரமாணுக்களால் அமைந்த இம்மூவுலகையும், தனது வாலறிவினால் உணரும் விமல தீர்த்தங்கரராகிய அருகப் பெருமான் விண்ணவர் மலர்மா¡¢ பொழிய அவர்களால் அமைக்கப்பட்ட தாமரைமலர்கள் மேல் (நான்கு அங்குல உயரத்தில்) ஸ்ரீ விஹாரமாகி உத்தர மதுரையில் ஓர் வனத்தில் எழுந்தருளினார்.

  ஸ்ரீ விஹாரச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page