Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1058.
வல்லிமண்டபங்கள் பந்தர் வயிரவாலுகத் தலங்கள்
 வில் உமிழ்ந்து இலங்கும் பூமி விழுந்த பூவணையின் வீயைப்
 புல்லும் வண்டின் ஓசை பூமி தேவனைப் பாடல்போலும்
 எல்லையில் இடங்கள் இவ்வாறு இயம்புதற்கு அ¡¢யதொன்றே.
அந்த வல்லி பூமியில் மண்டபங்களும், மலர்ப் பந்தர்களும், வயிரங்களே மணலாக அமைந்த ஒளி உமிழ்ந்து விளங்கும் பூமியில் படிந்திருக்கும் மலர்களின் மகரந்தத்தை உண்ணும் வண்டுகளின் ¡£ங்கார ஒலியானது பூமியே வாய் திறந்து இறைவனைத் துதிப்பதுபோல் இருந்தது. இந்த இடத்தின் பெருமையைச் சொல்லற்கியலாது.

1059.
மல்லிகை முல்லை மெளவல் மாலதி மாதவி நல்
 பல்லிதழ் பத்தி பித்தி சண்பகம் குறிஞ்சி வெட்சி
 சொல்லிய பிறவும் செல்விச் சூட்டெனச் செறியப் பூத்த
 வல்லிநன் மலர்க்கை ஏந்தி வந்து கோபுரம் அடைந்தார்
அந்த வல்லி பூமியில் மல்லிகை, முல்லை, வனமல்லி, சிறு சண்பகம், மாதவி, கருமுகை, சண்பகம், குறிஞ்சி வெட்சி முதலிய மலர்க்கொடிகளும் இலக்குமியின் தலைச்சூட்டு போல் நெருக்கமாக மலர்ந்திருந்தன. சிறந்த மலர்களை கைகளில் கொண்டு இருவரும் உதயதரம் என்னும் கோபுர வாயிலை அடைந்தனர்.

1060.
காதம்மூன்று இரண்டு உயர்ந்து நீண்டு அகன்று வாய்தல்
 காதமாய்ச் சிறப்பு மும்மைப் படிமை முன்னிலைய தாகிச்
 சோதியுள் குளித்து வாய்தல் சோதிடத்தேவர் காப்பப்
 போதரும் பதாகை சூழ்ந்தது உதய கோபுரம் அதாமே.
அந்தக் கோபுரம் மூன்றுகாத உயரமும், இரண்டு காத அகலமும் வாயிற்புறம் ஒருகாத அகலமும் உடையதாய் அட்டமங்கலங்களைப் பெற்ற நிலைக்கு ஒன்றாக மூன்று ஜினபிம்பங்கள் உடைய மூன்று நிலைகள் உடையதாய் இருந்தது. அதன் வாயிலின் இரு பக்கங்களிலும் அங்குள்ள ஒளியில் தங்கள் ஒளிமங்கி நிற்க, சோதிர் தேவர்கள் காவல் பு¡¢யவும், அழகிய கொடிகள் சூழ்ந்ததாய் விளங்கியது.

1061.
வில் ஐஞ்ஞூறு அகன்று உயர்ந்து வெள்ளியால் இயன்று சென்னிச்
 சொல்லிய வகையினாலே சுருங்கிப் பொன் சூட்டதாகி
 வல்லி முந்நிலை அட்டாலைக் கொடியுடை மதிலின் நின்ற
 சொல்லிய கோபுரத்தைத் தொழுது பூச்சிதறிப் புக்கார்.
ஐந்நூறு வில்லளவு அடி அகன்று, இரண்டாயிரம் வில் உயரமுடையதாய், வெள்ளியினால் செய்யப்பட்டு, அடியில் மூன்று குரோசமும், மத்தியில் ஒன்றரைக் குரோசமும், தலைப்பில் முக்கால் குரோசமும் அகலமுடையதாகி, பொன்னால் ன தலைக்கட்டினைப் பெற்று, அந்தந்த அளவிற்கேற்ப அமைந்த திண்ணைகள் உடைய மூன்று நிலைகளையுடையதாகி, கொடிகளை உடைய உதயதரம் என்னும் மதியில் சேர்ந்து, வீதிகளின் நோ¢ல் நின்ற உதயதர கோபுரத்தை வணங்கி, பூக்களைத் தூவி அதனுள் அமைந்திருந்த வனபூமியை அடைந்தார்கள்.

1062.
பலநிறம் பயின்ற பூமி, பரமனது அறிவு போல
 உலகெலாம் அடங்கு மேனும், உள்ளிரு காதமாகி
 நிலவிய மதிலின்மூலை நின்ற குட்டியங்கள் நான்கில்
 பலவனமாகிப் பைம்பொன், மதிலினைச் சூழ்ந்ததுண்டே
பலவண்ணங்களைப் பெற்ற அந்தவன பூமியானது இறைவனது வாலறிவினைப் போல இவ்வுலகத்தவர்களையெல்லாம் தன்னுள் அடக்கக் கூடியதாய் இரண்டு காத அகலமுடையதாய் உதயதரம் பி¡£திதரம் என்னும் மதில்களுக்குட்பட்டதாய் ஒளிமிக்க அதன் நான்கு வீதிகளில் இடைப்பட்ட இடங்களில் நான்கு மேடைகளைப் பெற்று பொன் மதிலாகிய பி¡£திதரத்தைச் சூழ்ந்து பல்வேறு தருக்களையுடைய தாய், வனபூமி என்னும் பெயா¢னைப் பெற்றது.

  சமவ சரணச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page