Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
151.
சிந்தை முறுக்கி விமானம் செல்லா நோக்கி
 அந்தத் தடத்தின் நடுவே முனியை யவனிட்டு
 முன்செய் வினையால் அவன் அம் முனியை முறுக்கினான்
 முன்செய் வினையின் மேலே முனியும் உறுகின்றான்.
மிகவும் மனத்தால் முயன்று மந்திர சக்தியைச் செலுத்தியும், ஊர்தி மேலே செல்லாமல் விண்ணகத்தே நின்றுவிட்ட நிலையை நோக்கிய விஞ்சையன் தான் கொண்டு வந்த முனிவனை அங்கே விட்டுத் துன்புறுத்த தான் செய்த பழவினை காரணத்தால் அத்தவ முனிவனும் தான் செய்த பழவினை ஒழிய அத் துன்பங்களை ஏற்றுத் தியானத்தில் நிலைத்தான்.

152.
மத்தத் தந்தி வடிவாய் வீரன் மார்வத்துக்
 குத்தக் குறுகா மறியா ஓடிக் கோன்மாவாச்
 சத்தி தண்டு தாரை வாள்வேல் தடியேந்தி
 எத்தா எறியா விழியா தெழியா விடைந்தோடும்.
துன்புறுத்தத் தொடங்கிய வித்துத்தந்தன் அளவுகடந்து - மதயானையாக மாறி மார்பிலே குத்துவது போலவும், மிக நெருங்கிய சூலம், தண்டு, கூர்வாள், வேல், தடி முதலியவற்றைத் தாங்கி வீசியும் நெருப்பெழ விழித்து நோக்கியும், பின்னடைந்து சென்று புலியாக மாறி மீண்டும் முனிவர் மேல் பயந்தும் துன்புறுத்தலானான்.

153.
வாளெயிறு இலங்க அங்காந்து அரவமாய் வந்து தோன்றும்
 கோளா¢ ஏறுமாகிக் குப்புற்றுக் குலுங்கத் தோன்றும் 
 நீளொ¢ கொளுவும் சுற்றுநிலம் பிளந்து அதிர ஆர்க்கும்
 தோளினைத் துணிப்பன் என்று வாளினைச் சுழற்றித் தோன்றும்.
அந்த வித்துத்தந்தன் பொ¢ய பாம்பாக மாறி ஒளிமிக்க எயிறுகள் விளங்கும்படி வாயைத் திறந்துகொண்டு, முனிவனை நெருங்கி வருவான், கொலைத் தொழிலையுடைய ஆண் சிங்கமாகி நடுங்கும்படி குதித்துச் சிலிர்ப்பான், அவரைச் சுற்றி நெருப்பிட்டுக் கொளுத்துவான், பூமியே பிளக்கும் வண்ணம் அதிரும்படி ஆர்ப்பா¢ப்பான், வாளைச் சுற்றிக்கொண்டு 'கைகளை வெட்டுவேன்'

154.
அழல் உமிழ்ந்து இலங்கும் வெவ்வாய் ஓ¡¢யாய் அழைத்துக் கத்தும்
 சுழலும் வெம்கண்ணவாய எருவையாய்ச் சுழலஓடும்
 மழையெனத் துறுகல் பெய்யாமலை எடுத் திடவந் தெய்தும்
 உழையவர் நடுங்க எல்லா ஊனமும் ஒருங்கு செய்யும்.
அந்த வித்துத்தந்தன் நெருப்பைக் கக்கும் ஒளிமிக்க வாயினையுடைய நா¢யாக மாறி குரலெடுத்துக் கத்துவான், சுழலுகின்ற வெப்பம் மிக்க கண்களையுடைய கோட்டானாகி சுற்றி ஓடுவான், பொ¢ய கற்களை மழைபோல் பொழிவான்; மலையைத் தூக்கிக் கொண்டு முனிவர்மேல் போடுவதற்கு ஓடி வருவான்; அவனது ஏவலரே நடுங்கும் வண்ணம் எல்லையற்ற தீங்குகளைச் செய்யத் தொடங்க

155.
இனையன பலவும் செய்ய இறைவனும் இவை யெலாம்என்
 வினையின பயன்கள் என்றே வெகுண்டிலன் வினைகள்மேலே
 நினைவினை நிறுத்தி நின்றான் ஈசனு நீங்கிப் போகித்
 தனதிடங் குறுகி யாரும் சலித்தெழும் படியிற் சொன்னான்.
வித்துத்தந்தன் இதுபோன்ற எல்லையற்ற கொடுமைகளைச் செய்தாலும், சஞ்சயந்த முனிவர், 'இவையனைத்தும் நான் முற்பிறவியில் செய்த வினைப்பயன்களே' என்று சற்றும் வெகுளாது தனது வினைகளில் கவனத்தைச் செலுத்தித் தியானத்தில் நின்றான்-கீழோனாகிய விஞ்சையன் அவரை விட்டு நீங்கித் தனது நகரத்தை அடைந்து, அங்குள்ளோர் நம்பும்படி கூறத் தொடங்கினான்.

  சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page