Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
234.
கலையின் இன்பமும் காமரு கன்னியர்
 மலைவில் இன்பமும் முத்தொடு மாமணி
 விலையி னின்பமும் வேண்டினர்க் கீந்து எய்தும்
 தலையி னின்பமும் தானவ னெய்தினான்.
பத்திரமித்திரன் பல்வேறு கலைகளைக் கற்றதனாலும் கவின்மிகு கன்னியர் உறவினாலும் முத்து, மணி இவைகளின் வாணிப ஆக்கத்தினாலும் அடைந்த இன்பத்துடன் வேண்டுவார் வேண்டுவன நல்கியதால் அடைந்த சிறந்த இன்பத்தையும் எய்தினான்.

235.
படங் கடந்தணி தங்கிய வல்குலும்
 குடங்கை யேஅள வுள்ள கொழுங்கணும்
 வடம்சுமந்தெழு கொங்கையும் மங்கையர்
 நுடங்கு நுண்ணிடை யுள் நுகர் வெய்தினான்.

பாம்பினது படம் போன்ற அல்குலையும் உள்ளங்கை அளவுள்ள கொழுவிய கண்களையும், முத்துவடங்களையும் மலர் மாலைகளையும் அணிந்து, மதர்த்த மார்பகங்களையும், அசையும் நுண்ணிடையுமுடைய மங்கையர் இன்பத்தை அப்பத்திரமித்திரன் பொ¢தும் நுகர்ந்தான்.

236.
வளம்சு ருங்கிடின் மாநிதி யும்பலோர்
 அளந்து கொண்டுண லாம்படி தானெழல்
 உளம்செய்து ஊதியம் உள்பொருள் கொண்டுபோய்
 விளங்கு மாமணித் தீவது மேவினான்.
வருவாய் குறையுமானால் ஏற்கெனவே இருக்கும் செல்வத்தைச் சுற்றத்தவர் கணக்கிட்டு அளவோடு உண்ணும்படி ஆகிவிடும், எனவே மேலும் செல்வம் பெருகும்படி, கடல் வாணிபத்திலே ஊக்கம் கொண்டு பத்திரமித்திரனானவன் தன்னிடமுள்ள பண்டங்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு மிகப்பொ¢ய அழகிய ஓர் தீவினை அடைந்தான்.

237.
சென்று சாத்தோடுஅத் தீவினைச் சேர்ந்தவன்
 ஒன்றும் வாணிபத் தால்பெற்ற ஊதியம்
 மன்ற மாதவர் கையிட்ட வல்சியால்
 நின்ற போக நிலம் பெற்ற தொக்குமே.
வணிகக்குழுவினருடன் அத்தீவினைச் சேர்ந்த பத்திரமித்திரன் தனக்குப் பொருத்தமான வாணிபத்தைச் செய்து அதன் மூலம் பெற்ற ஊதியமானது மிகவும் சிறந்த மாமுனிவருக்குக் கொடுத்த ஆகார தானத்தின் பயனாக நிலை பெற்ற மேலான போக பூமியைப் பெற்றதற்கு நிகரானதாக இருந்தது.

238.
புண்ணி யம்உத யம் செய்த போழ்தினில்
 எண்ணி லாத பொருட்குவை யாவையும் 
 நண்ணும் என்றருள் நாதன் உரையினுக்கு
 அண்ண லேஎடுத் தீடது வாயினான்.
ஒருவனது புண்ணியவினையானது பயன்தரத்தொடங்கினால், கணக்கற்ற செல்வங்கள் வந்து குவியும் என்று அருகபெருமான் அருளியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாகப் பத்திரமித்திரன் விளங்கினான்.

  பத்ரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page