Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
367.
பிறவிகள் அனந்தம் தம்மில் பெற்றதாய்ச் சுற்ற மல்லால்
 உறவிகள் ஒன்றுமில்லை ஊனினை உண்டு வாழ்வார்
 மறமலி மனத்தராய்த் தம் மக்களைத் தின்கின்றார் என்று
 இறைவனை இவள் உரைத்தாள் இன்று தன் மகனைத் தின்றாள்.
எண்ணற்ற இப்பிறவிகளில் அன்னையாகவும் மற்ற உறவினர்களாகவும் இராதவர்கள் யாருமே இல்லை. எனவே ஊனினை உண்டு வாழ்பவர் கொடியமன முடையவராய் தங்கள் மக்களையே தின்று வாழ்கின்றார்கள் என்று உரைத்த இறைவனது நீதிகளை எடுத்து மற்றவர்களுக்குக் கூறிய இந்தச் சுமித்திரையானவள் இப்போது தானே தனது மகனைத்தின்றாள். நீதியறிந்தும் இந்நிலைக்கு ஆளான

368.
கருதினார் கருதிற் றெல்லாம் கருணையால் ஈயும் கற்பத்
 தருவின்மேல் உருமு வீழ்ந்து சாய்ந்தது போல மாய்ந்து
 பருமத யானை வேந்தன் தேவிமேல் பற்றுள்ளத்தால்
 திருமகளனைய ராமதத்தை தன் சிறுவனானான்.
வேண்டியவர்கட்கு வேண்டியவற்றைத் தயவுடன் வழங்கும் கற்பகத்தரு இடியினால் சாய்ந்தது போல், புலியால் மடிந்த பத்திரமித்திரன் பருத்த மத யானைகளையுடைய வேந்தனது மனைவி இராமதத்தையின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவள் கருவிலே மகனாக அடைந்தான்.

369.
கண்ணிடை வெளுப்பெலாம் போய் முகத்திடை பரக்கக் காணா
 நுண்ணிடை தோன்ற விம்மா கண்ணகில் கறுத்த நோக்கிப்
 பண்ணிடை கிடந்த தீஞ்சொல் பவழவாய் பாண்டுவாக
 மண்ணிடைத் தோன்ற மைந்தன் மதிபெற்ற திசையை ஒத்தான்.
கருவுற்ற இராமதத்தா தேவியின் கண்ணின் வெளுப்பு மறைந்து முகத்தில் சென்றது போல் முகம் வெளுத்தது. நுண்ணிய இடை சற்று பருத்துத் தோன்ற முலைக்கண்கள் கருப்பாகி இனிமையாகப் பேசும் பவழம் போன்ற சிவந்த வாயானது வெண்மையாக இவ்வாறு நிறைவுற்று கருவிலே வளர்ந்த மகன் இவ்வுலகில் பிறந்தான். மகன் பிறந்ததைக் கேட்ட மன்னன் முழுமதி தோன்றியதும் ஒளிரு

370.
வேய் எனத்திரண்ட மென்தோள் மெல்லியலோடும் வேந்தன்
 ஆயிரக் கிரணன் சென்ற திசையொடு வானை ஒத்துப்
 பாயிரும் பரவை ஞாலம் பைம் பொனால் ஆர்த்தி நாமம்
 சீய சந்திரன் என்று ஓகைத் திசைதொறும் போக்கினானே.
மூங்கிலைப்போல் திரண்ட மென்மையான தோள்களையுடைய நல்லியல்பு மிக்க இராமதத்தையுடன் மன்னன் சீயசேனனும் கதிரவன் செல்லும் திசைபோல் ஒளிமிக்க உள்ளத்தனாகி மிகப்பொ¢ய கடலால் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளவர்க்குப் பொன்னையும் பொருளையும் வா¡¢வழங்கி மகனுக்குச் சிம்மச்சந்திரன் என்னும் பெயர்சூட்டி இம் மகிழ்ச்சியான செய்தியை மற்ற மன்னர்களுக்கும் தொ¢ய

371.
நலிவிலாத் தடத்துள் நின்ற நளினம் போல் வளர்ந்து நண்ணார்
 குலமெலாம் மெலிய வாங்கும் கொடுஞ் சிலைப் பயின்று குன்றாக்
 கலையெலாம் கடந்து காமம் கனிந்தன கமல மொட்டின்
 முலைநல்லார்ச் சேர்ந்தினார்கள் முருகுண்ணும் வண்டை ஒத்தான்.
நீர் நிறைந்த குளத்தில் நிலைபெற்ற தாமரைப§¡ல் மகன் வளர்ந்து பகைவர்தம் குலம் நலியும் வண்ணம் கொடியவிற்கலையைப் பயின்று, மற்ற அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்து, மனதை மயக்கும் தாமரை மொட்டினை நிகர்த்த முலைகளையுடைய அரச குமாரத்திகளை முறைப்படி மணந்து தேனுண்ணும் வண்டுபோல இன்பத்தை நுகர்ந்தான்.

  பூரண சந்திரன் அரசியற் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page