Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
464.
சாந்தமா மதியைச் சார்ந்து தைலாய் உனைப் பயந்தாள்
 காந்திதா னாயி னாள்அக் காவலன் சீய சேனன்
 பாந்தளான் மா¢த்துப் போகிச் சல்லகீ வனத்துக் மைமா
 வேந்தனாய் முனிய வேடர் இட்டபேர் அசனி கோடம்.
மேலும் உன்னை ஈன்ற அன்னையானவள் சாந்தி மதிகள் என்னும் துறவியைச் சேர்ந்து போற்றற்கு¡¢ய ஆர்யகையாயினாள். மன்னன் சீயசேனன் பாம்பினால் இறந்து சல்லகி என்னும் வனத்திலே யானையாகப் பிறந்தான். அக்காட்டிலே வசித்த வேடர்கள் அந்தச் சினம் மிக்க யானைக்கு அசனி கோடம் எனப் பெயா¢ட்டனர்.

465.
நாகாந்தத் தென்னைக் காணா மதத்தி நாகம்
வேகாந்தத் தாலென் மேலே வெகுளியா லோடி வந்தது
ஆகாசத் தியானெ ழுந்தேன் அங்குவந் தென்னைத் காணா
ஏகாந்த நெறிபுக் கின்மை கண்டவ னொருவ னொத்தே.
மலையுச்சியிலே என்னைக் கண்ட அந்த யானையானது மிக்க மனக் கிளர்ச்சியுடன் சினம் பொங்க ஓடி வந்தது. யான் ஆகாயத்தில் எழுந்தேன். என்னைக் கண்டு ஏகாந்த நெறியை நம்பி இறுதியில் எதையும் அறிய இயலாதவனைப் போல் ஏமாந்து நின்றது.

466.
வெங்கதங் கடாவக் கூற்றொத்து என்னை மேனோக்கிப் பார்க்கச்
சிங்கமா புரத்து வேந்தே! சீயமா சேன ஓய்நீ
இங்கு வந்து யானை யானாய் பாவத்தால் இதனை விட்டால்
பொங்கிவீழ் நரகந் தன்னில் பொருந்தவோ முயற்சி யென்றேன்.
அந்த யானை மிக்க கோபத்திற்கு ஆட்பட்டு யமனைப் போல் என்னை நிமிர்ந்து பார்த்தபோது யான் கூறினேன்! 'ஏ, சிங்கபுரத்து வேந்தனாகிய சீயசேனனே! நீ செய்த பாபத்தினாலே யானையாகப் பிறந்துள்ளாய். மீண்டும் மேலெழும்பி கீழே விழுகின்ற கொடிய நரகத்தில் பிறப்பதற்காகவா முயற்சிக்கின்றாய்.

467.
அரசனாய்ப் பொ¢ய இன்பத்து அழுந்தக் கண்டக் கணாலே
கா¢யதாய்ப் பொ¢ய துன்பத்து அழுந்தவிக் கானிற் கண்டேன்
பொ¢யதோர் பாவத் தாலிப் பிறவியைப் பொ¢து மஞ்சித்
திருவற மருவு யானச் சீயசந் திரனென் றிட்டேன்.
மேலும், முற்பிறவியில் அரசனாக இருந்து அனுபவித்த இணையற்ற இன்பங்களைக் கண்ட அதே எனது கண்களால் இப்போது நீ யானையாகிப் படும் பெரும் துன்பத்தையும் காண்கிறேன். எனவே நீ செய்த பெரும் பாவத்தால் இந் நிலை தோன்றியது எனப் பாபத்திற்கு அஞ்சி நன்மை பயக்கும் நல்லறத்தை மேற்கொள்வாயாக' என்று கூறினேன்.

468.
என்றலும் எழுந்தபோதத் திறந்தவப் பிறவி தன்னை
அன்றவன் அறிந்து மூர்ச்சித் தருவரை போல வீழ்ந்தான்
நின்றதோர் படியிற் றேறி நிறைதவன் போல நின்றான்
சென்றுயான் அறத்தைக் கூறச் செவியினைத் தாழ்த்த லோடும்.
நான் அவ்வாறு கூறியதும் அதற்குத் தோன்றிய முற்பிறவி அறியும் ஞானத்தால் தான் முற்பிறவியில் அரசனாக இருந்ததை உணர்ந்து இன்றையப் பிறவியை ஒப்பிட்டு மயங்கி மலை சாய்வதைப் போல் வீழ்ந்தான். பிறகு தெளிந்து தேறி முற்றும் உணர்ந்த முனிவனைப்போல் அமைதியாக நின்றான். இது தக்க சமயமென்றுணர்ந்து நான் அறத்தைக் கூற தனது இரு செவிகளையும் தாழ்த்

  நால்வரும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page