Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
571.
காவலன் போலத் தீப சாகரம் சூழ நின்ற
 நாவலந் தீவு தன்னுட் பாரதத்து நடுவ ணோங்கிச்
 சேவலன் னத்திற் சேடி சிறகினை வி¡¢த்துத் தீவை
 மேவலுற் றெழுவ தொக்கும் விலங்கல்வே தண்ட முண்டே.
கணக்கற்ற கடல்களும், தீவுகளும் தன்னைச் சூழ்ந்திருக்க மன்னர் மன்னனைப்போல், நடுவில் நின்ற ஜம்பூத்தீவிலே அதன் மையத்தில்-ஒரு ஆண் அன்னத்தைப்போல் வடதென் பகுதிகளாகிய சிறகுகளை வி¡¢த்து ஜம்பூத்தீவின் அளவிற்கு நீண்டு மேலெழுவது போல் வெள்ளியம் பெருமலையானது விளங்குகிறது.

572.
ஆழியைச் செறிந்து கண்டம் ஆறையும் அடிப டுத்து
 வேழமா நிரைகள் விண்ணோர் வேந்தர் விஞ்சையர்கள் சூழ
 வாழியங் கங்கை சிந்து வந்தடி யடைந்த குன்றம்
 பாழியம் தடக்கை வேந்தன் பரதன்போன் றிலங்கு நின்றே.
மிகப்பொ¢ய லவண சமுத்திரத்தால் சூழப்பட்ட ஆறு கண்டங்களையும் தன்னடிப்படுத்தி மிகப்பொ¢ய யானைக்கூட்டங்களுடன் அமரர்கள், அரசர்கள், விஞ்சையர்கள் நிறைந்திருக்க, கங்கை, சிந்து என்னும் இரண்டு மாநதிகள் தன்னை சேர்ந்து செல்லும் இந்த விஜயார்த்தம் என்னும் பெருமலையானது, நீண்ட கைகளையுடைய பரதச்சக்கரவர்த்தி போல் புகழுடன் விளங்குவதாகும்

573.
அன்பதும் இருபத் தைந்தும் புகையகன்று உயர்ந்து நீளம்
 ஒன்பதும் ஒன்று மாய ஆயிரத் ததிக மோடி
 ஐம்பதும் பத்தை மேற்சென் றிங்கிரு மருங்கும் புக்கு
 விஞ்சைய ருலக மாகிப் பப்பத்து வீழ்ந்த வெற்பின்.
அப்பெருமலையானது வடக்குத் தெற்கில் ஐம்பது யோசனை அகன்றும், இருபத்தைந்து யோசனை உயர்ந்தும், அதன் நீளமானது தெற்கில் ஒன்பதினாயிரத்திற்கும் அதிகம் யோசனையும், அதன் வடபுற நீளம் பத்தாயிரம் யோசனைக்கும் அதிகமாகவும் நீண்டு, உயரத்தில் பத்து யோசனை அளவும், அகலத்தில் வடதென்புறங்களில் பத்து யோசனை அகலமாகவும் அமைந்து, வடதென்பகுதியில்

574.
நின்றமுப் பதும்பத் தேறி நெறியினால் சேடி யாகிச்
 சென்றன சக்க வாலர் வியோகர புரங்க ளாகும்
 அன்றியக் குன்றிற் பத்தும் ஐந்துயர் சூளி யாமேல்
 ஒன்றிநின்று ஒளிரும் கூடம் மகுடம்போ லொன்ப தாமே.
எஞ்சிய முப்பது யோசனை அகலத்தில் பத்து யோசனை உயரத்தில் வடதென்பக்கங்களில் பத்துப் பத்து யோசனை அகலத்தில் உத்தர சேணி, தட்சிண சேணி என்னும் பெயருடையதாகி அங்கே சக்கரவாளர் என்னும் வியந்திர தேவர்கள் வாழும் நகரங்கள் அமைந்திருக்கும். அடுத்து எஞ்சிய பத்து யோசனை அகலம் ஐந்து யோசனை உயரமும் மேடைபோல இருக்கும். அதிலுள்ள சிகரமா

575.
இமையத்தின் இரும ருங்கும் நிலங்கள்போல் இலங்கும் வெள்ளிச்
 சிமையத்தின் இரும ருங்கும் சென்றவிஞ் சையர்கள் சேடி
 சமையத்து நான்க தாவ தொக்குமேற் றிழிவு தன்னின்
 நமையொப்பர் விஞ்சையால் இவ் விஞ்சையர் நாகர் கோவே.
தரணேந்திரனே! இமவான் பெருமலையின் இருபக்கங்களிலும் பரந்து கிடக்கின்ற பரத ஐமவத நாடுகளைப் போல் வெள்ளி மலையாகிய, விஜயார்த்த மலையின் இரண்டு பக்கங்களிலும், இறங்கு காலத்தின் நான்காம் பி¡¢வின் இயல்பினைப்போல் ஏற்றத்தாழ்வுடையதாக விஞ்சையர்கள் கல்வி, வித்தை போன்றவற்றில் மனிதர்களைப்போல் சிறந்து விளங்குவர்.

  மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page