Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
759.
அஞ்சுவரு டம்கடந்து நாமகளோ டாடி
 வெஞ்சிலை முதற்படை பயின்றபினை வெம்பூஞ்
 செஞ்சரம் வா¢ந்தசிலை ஏந்தித்திறல் மாரன்
 மைந்தனொடு போர்தொடங்கி வாளிதொட லுற்றான்.
அவனுக்கு ஐந்து வயது நிரம்பியதும் நாமகளுடன் விளையாடி அதாவது கலைகளைக் கற்று, வில் வித்தை முதலிய அனைத்துப் படைக்கல பயிற்சியையும் பெற்ற அவனை, விரும்பத் தக்க அழகிய மலர்களைக் கணையாகத் தொடுத்த கரும்பு வில்லேந்திய காமன், தனது அம்பிற்கு இலக்காக்கினான். (இளமையுடன் பொலிவு பெற்றான்)

760.
ஆங்கதனை மன்னன்அப ராசிதன் அறிந்து
 கோங்கரும்பு போலும்முலைக் கொவ்வையெனச் செவ்வாய்
 தேங்குழலி சித்திரநன் மாலையெனும் செம்பொன்
 வாங்கனைய தோளிதுணை யாகமலி வித்தான்.
தனது குமாரன் வாலிப பருவ மெய்தியதை உணர்ந்த அபராஜித வேந்தன் கோங்கின் மொட்டு போன்ற தனங்கள், கொவ்வைக் கனி போன்ற செவ்வாய், மணம் மிகுந்த கூந்தல், பொன்வாங்கு நிகர் தோள்கள் இவற்றையுடைய சித்திர மாலை என்னும் அரச குமா¡¢யைத் திருமணம் செய்தான்.

761.
மின்னினொடு மேகம்விளை யாடுவது போல
 அன்னநடை யோடுஅவன் அமர்ந்தொழுகும் வழிநாள்
 மன்னருக்க வேகன்மலி காவிட்டத்தின் வழுவி
 அன்னவர்கள் தம்புதல்வ னாகிஅவ தா¢த்தான்.
மின்னல் மேகத்தோடு ஆடுவது போல் அன்னம் போன்ற நடையுடைய அவளுடன் இணைந்து வாழும் காலத்து, காபிட்டகல்பத்து தேவனாக இருந்த கிரணவேகனது தேவ வாழ்வு முடியவும் சக்ராயுதனுக்கு மகனாக அவதா¢த்தான்.

762.
வானத்து மின்னு முன்னாள் மதியினைப் பயந்ததே போல்
 தேனொத்த மொழியி னாள்அத் தேவனைப் பெற்ற போழ்தின்
 ஊனத்தை வையத் தின்கண் அகற்றிநின்று உதவி மன்னன்
 மானத்தை யுடைய நாமம் வச்சிரா யுதன்என் றிட்டான்.
விண்ணகத்து மின்னற் கொடியானது முழுமதியைப் பெற்றது போல் தேன் நிகர் மொழியாள் சித்திர மாலை, அந்த அமரனை மகனாகப் பெற்றபோது, உலக மக்களின் வறுமை ஒழியுமாறு தானங்களை வழங்கிய சக்ராயுதன் மிகவும் பெருமைக்கு¡¢ய பெயராகிய 'வஜ்ராயுதன்' என்னும் பெயரை அரச குமாரனுக்குச் சூட்டினான்.

763.
மதிகலை வளரத் தானும் வளர்வதே போல மைந்தன்
 விதியினால் கலையும் வேந்தர் விஞ்சையும் விளங்க ஓங்கி
 துதிகொண்ட வேல்கண் நல்லார் நோக்கினுக் கிலக்க மானான்
 அதிபதி அதனை ஆராய்ந்து அ¡¢வையைப் புணர்க்க லுற்றான்.
மதியும் கலையும் சேர்ந்து வளர்வது போல் அரச குமாரனும் அவன்பால் அனைத்துக் கலைகளும் ஒருங்கே வளர்ந்து கூர்மை மிக்க வேல் போன்ற கண்களையுடைய பெண்களின் நோக்கிற்கிலக்காகிய இளமை ¦ய்தினான். அதனை யறிந்த சக்ராயுதன் மகனுக்கு மணம் முடிக்க முயன்றான்.

  சக்ராயுதன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page