Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
823.
நந்து சிப்பிசங்கு ஆதி நாவன
 குந்து எறும்புகோ பாதி மூன்றன
 வந்து தும்பிவண் டாதி நாலவைந்து
 இந்தி யம்பசுநரர் நாகர் தேவராம்.
நத்தை, சங்கு, சிப்பி போன்றவை தொடுவுணர்வுடன் சுவையுணர்வையும் பெற்று இரு இந்தி¡¢ய உயிர்களாகவும், எறும்பு, பட்டுப்பூச்சு முதலியவை மேலே கூறிய இரு புலன்களுடன் கேட்டல் உணர்வுடன் மூன்று இந்தி¡¢ய உயிர்களாகவும், தும்பி, வண்டு, அந்து போன்றவை அவற்றுடன் பார்க்கும் சக்தி பெற்று நான்கு இந்தி¡¢ய உயிர்களாகவும் பசு, மனிதர், நரகர், தேவர் ஆகியோர் மனம் என்னும் ஐந்தாவது பொறியைப்¦ பற்ற ஐம்பொறி உயிர்களாகவும் அறியப்படும்.

824.
உழுதல் கல்லுதல் அடைத்த லோடுகாய்
 தழல்க ளாதிமண் ணுயிர்கள் மாய்ந்திடும்
 அழலை ஆற்றுதல் அவித்தல் ஆதியாய்த்
 தழலு டம்பன தானும் மாயுமே.
நிலத்தை உழுதல், பள்ளம் தோண்டுதல், பள்ளத்தைத் தூர்த்தல், நெருப்பு எ¡¢தல் ஆகிய இவற்றால் மண்ணுயிர்கள் மாயும், வெப்பத்தைக் குறைத்தல், நெருப்பை அவித்தல் ஆகியவற்றால், நெருப்பை உடலாகப் பெற்றவை அழியும்.

825.
திரைஅ லைப்பவும் தீயிற் காய்ச்சவும்
 தரைந னைப்பவும் சாங்கள் நீருயிர்
 வரையோடு எற்றவும் வட்டம் ஆதிகள்
 பொரவும் வாதகா யங்கள் பொன்றுமே.
மேலும், அலை வீசுவதால், நீரைக் கலக்குவதால் நீரைச் சூடேற்றுவதால், பூமியை நீரால் நனைப்பதால், நீர் உடலிகள் இறக்கும், மலையில் மோதும் சூறாவளியால், சுழற்காற்றால் காற்றுடலிகள் மாய்ந்துவிடும்.

826.
வெயிலும் மா¡¢யும் மிக்க வாதமும்
 அயில்செய் வெம்படைத் தீயோ டாதியால்
 பயிர் மரம் முதல்பசிய காயமாம்
 உயிர்கள் நொந்துவெந் துயர் உழக்குமே.
எ¡¢யம் தீ, கொடிய வெயில், பெருமழை. கடுங்காற்று கூ¡¢ய ஆயுதங்கள் ஆகிய இவற்றால், பயிர்கள் மரங்கள் முதலியவற்ற¨ உடலாகயுடைய உயிர்கள் துயருற்று நாசமாகும்.

827.
மால்க டல்பிறந் தாலும் ஆவதென்
 மேலை வெவ்வினை நிற்கு மாய்விடின்
 வால்வ ளைமக ரங்கள் சிப்பிமீன்
 காலன் அன்னவர் கையின் மாயுமே.
மேலும், வெண்ணிறச் சங்கும், மகர மீன்களும் முத்துச் சிப்பியும் மற்றுமுள்ள மீனினங்களும் கடலிலே பிறந்தாலும் அவற்றின் பாப வினை உதயமானால், எமனுக்கு நிகரான கொலைக்காரர்களினால் முடிவை எய்தும்.

  வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page