Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
901.
துரகங்கள் திரைக ளான சுறாஎறி வீர ரானார்
 கா¢மக ரங்க ளான கால்படை கடல தாகப்
 பொருபடை வீரர் கைவாள் புரண்டெழு மீன்க ளாகக்
 கரைசெறி நாவாய் தேராய்க் காவலர் காம ரானார்.
காலாட்படை கடலாகவும், அலைகள் குதிரைகளாகவும், படை வீரர்கள் சுறாமீன்களாகவும், யானைகள் முதலைகளாகவும் மாறினர். போர் வீரர்களின் கைவாள்கள் புரண்டு செல்லும் மீன்களாகவும், ரதங்கள் துறை நோக்கிச் செல்லும் கப்பல்களாகவும் மன்னர்கள் மாலுமிகளாகவும் தோன்றினர்.

902.
வில்லொடு வில்வந் தெற்ற வேலொடு வேல்வந் தெற்ற
 மல்லொடு மல்ல ரெற்ற வாட்படை வாளோ டெற்றக்
 கொல்களி யானை யோடு தேர்களும் தம்மில் எற்ற
 நல்லுளைப் புரவி யோடு புரவிநாட் செய்த போரே.
காலாட்படை கடலாகவும், அலைகள் குதிரைகளாகவும், படை வீரர்கள் சுறாமீன்களாகவும், யானைகள் முதலைகளாகவும் மாறினர். போர் வீரர்களின் கைவாள்கள் புரண்டு செல்லும் மீன்களாகவும், ரதங்கள் துறை நோக்கிச் செல்லும் கப்பல்களாகவும் மன்னர்கள் மாலுமிகளாகவும் தோன்றினர்.

903.
கால்பொரக் கதலிக் கானம் கடிதுடன் மடிந்த தேபோல்
 கோல்பொரக் கொடியின் ஈட்டம் குடையொடும் அற்று வீழ்ந்த
 வேல்பொரக் குருதிக் கும்பிக் குமிழிவிட் டெழுந்த நீல
 மால்வரை செங்கற் றாதின் குமிழிவந் தெழந்த தொன்றே.
பெருங்காற்று மோதும் போது வாழைத் தோட்டம் எவ்வாறு பூ, குலை, இலைகளுடன் வேரற்றுச் சாயுமோ அதுபோல் அம்புகளின் வேகத் தாக்குதலால் கொடிகளும், குடைகளும் அற்றுச் சாய்ந்தன. வேல்கள் தாக்கியதால் யானைகளின் நெற்றியிலிருந்து குருதியானது கொப்புளித்துப் பொங்கியது. இக்காட்சி பொ¢ய மலையிலிருந்து சாதி லிங்கக் குழம்பு வெளிப்பட்டு குமிழியிட்டு வழிந்ததற் கொப்பாகும்.

904.
விற்படை சரங்கள் வீழ்ந்து மேகங்கள் போல மாய்ந்த
 மற்படை யுடன்றெ ழுந்து மடங்கல்போல் பொருது மாய்ந்த
 வெற்பகம் பிளந்த வைவாள் எழிலியின் மின்னைப் போன்ற
 கொற்றவர் குடைக ளேந்தி நடந்தது குருதி யாறே.
விற்படை வீரர்களால் எய்யப்பட்ட அம்புகள் மேகம் மழை பொழிவது போல் மாறி மாறி வீழ்தலால் படைகள் மாய்ந்தன. மற்படை வீரர்கள் சிங்கங்கள் போல் சினந்தெழுந்து மோதிப் பொருது அழிந்தனர். யானைகளின் உடலை ஊடுறுவிப் பிளந்த வாள்கள் மேகத்தினிடையே மின்னற்கொடி நிகர்த்தன. ரத்த ஆறு வேந்தர்களின் வெண் கொற்றக் குடைகளை இழுத்துச் சென்றது.

905.
கால்பொரப் பெண்ணை நெற்றிக் கனிகள்போல் தலைகள் வீழ்ந்த
 கோல்பொரக் குளித்த யானைக் குருவிசேர் குன்ற மொத்த
 வேல்பொரக் கிடந்த வீரர் வேற்கணார் விழும நோயின்
 மால்பொரக் கிடந்த நெஞ்சின் மைந்தர்போல் மயங்கி னாரே.
பலமாக அடித்தக் காற்றில் பனம் பழங்கள் கொட்டுவது போல படை வீரர்களின் தலைகள் பூமியில் வீழ்ந்தன. உடல் முழுதும் தைத்த அம்புகளோடு காணப்பட்ட யானைகள் குருவிகள் அமர்ந்து நிறைந்திருந்த குன்றுகள் போல் காட்சியளித்தன. வேலால் தாக்கப்பட்டு மூச்சற்றுக் கிடந்த வீரர்கள் வேல் போன்ற அழகிய பெண்கள் பால் கொண்ட காம மயக்கத்தால் செய்வதறியாது காம நோயால் மயங்கிக் கிடப்பவர்களைப் போலாயினர்.

  பலதேவன் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page