Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
741.
தூம்பன்ன தடக்கை மாவைத் துயர்செய்து நரகம் புக்கங்கு
 ஆம்பல கடல்க ளெல்லாம் அவலமுற் றா¢தில் போந்து
 மேம்படல் இலாத வெல்லா விலங்கினும் சுழன்று மீண்டும்
 பாம்பதாய்ப் பதலை வங்கிற் பாவிதான் பா¢ண மித்தான்.
துளையுடைய தூண் போன்ற நீண்ட வலிமைமிக்க துதிக்கையையுடைய அசனிகோட மென்னும் யானை துன்புறும் படி கடித்துக் கொன்ற கோழிப் பாம்பாகிய பாபிதானும்இறந்து மூன்றாவது நரகத்தில் விழுந்து ஏழு கடற்காலம் நரக வேதனையை அடைந்து இப்போது ஒரு மலைப் பாம்பாகப் பிறந்து மேலே கூறிய மலைக்குகையில் உழன்று கிடந்தான்.

742.
இருவரும் இயம்பக் கேட்ட அறத்தின ராகிப் போகப்
 பொ¢யவன் குகையைச் சேரப் பிறையெயி றிலங்க அங்காத்து
 எ¡¢யெழ விழித்துக் காணா இறைவனைப் பிடித்த போழ்தில்
 அருகவென் றுரைப்ப மீளா அச்சியர் அதனைக் கண்டார்.
முன்பே தொ¢வித்தவாறு : பெண் துறவியா¢ருவரும் முனிவர் உரைத்த அறவுரையை ஏற்றுக்கொண்டு பணிந்து நீங்க மாமுனிவரும் குகைக்குள் சென்றார். அக்கணமே உள்ளே கிடந்த மலைப்பாம்பானது மிக்க சினத்துடன் தனது கொடிய பற்கள் தோன்றும்படி கண்களில் தீப்பொறி பறக்க முனிவனைப் பற்றியது. அவர் அருகா! என்றார். முனிவரது குரலைப் போய்க்கொண்டிருந்த பெண்

743.
வெகுண்டுவெய் துயிர்த்துச் சீறி விழித்தனல் உமிழ்ந்து வெண்பல்
 அகண்டமும் சிலிர்ப்ப அங்காந்த அரவுக்குஅஞ் சாது நாதன்
 நுகம்திரண் டனைய தோளைப் பற்றியாங் குற்ற போழ்தின்
 முகம்கண்டார் முனிவ னோடு மூவரும் விழுங்கப் பட்டார்.
சீறி வெகுண்டு அனல் கக்கும் கண்களை விழித்து வெப்பப் பெரு மூச்செறிந்து வெண்மை பற்கள் அனைத்தும் வெளியே தொ¢யும்படி சிலிர்த்து வாளைப் பிளந்த மலைப்பாம்பிற்குச் சிறிதும் அஞ்சாது அப்பெண் துறவியர்கள், நுகம் போன்ற பருத்த தோள்களைப் பற்றி விடுவிக்க முயன்ற போது முனிவரது முகம் மட்டுமே தொ¢ந்தது, விடாமல் முயன்ற இவர்கள் இருவரையும் அரவம் சேர்

744.
அருக்கனைச் சனிசெவ் வாயோடு அரவுதான் விழுங்கிற்றே போல்
 அருக்கவே கன்தன் னோடே ஆ¡¢யாங் கனைகள் தம்மை
 நெருக்கிஅவ் வரவம் கொள்ள நின்றதம் மெய்ம்மை தம்மேல்
 ஒருக்கிய மனத்த ராகி உடம்புவிட்டு ஒருங்கு சென்றார்.
சூ¡¢யனுடன், சனி, செவ்வாய் ஆகிய மூன்றையும் ஒருங்கே விழுங்கிய இராகுவைப் போல் கிரண வேக முனிவருடன் இரு பெண் துறவியரையும் ஒரு சேர அந்த அரவம் விழுங்கும்போது குலையாது யாதொரு சலனமுமின்றி உடலை விட்டு ஒன்றாக வேறு பிறவியை அடைந்தார்கள்.

745.
பாவிட்டன் மேலோர் கோபம் பணித்திலா மனத்தினார் போய்க்
 காவிட்ட கற்பத் தீரேழ் கடல்பெற்றங் கு¡¢சைக் கைமாப்
 பேர்பெற்ற விமானத் தின்கண் முனிஅற்கப் பிரப னானான்
 தீபத்தைப் புரையும் மாதர் தேவர்க்குத் திலத மானார்.
அந்தப் பாபியாகிய கொடிய பாம்பின்பால் வைரம் ஏதும் கொள்ளாமல் முடிந்த அம்மூவருள் கிரணவேக முனிவர் காபிஷ்ட கல்பத்தில் ருசகப் பிரபை என்னும் விமானத்தில் பதினாலு கடற்கால ஆயுளையுடைய அமரர் தலைவனாகி ரவிப்ரபன் என்னும் பெயர் பூண்டார். மற்ற இருவரும் அதே கல்பத்திலுள்ள சாராரண தேவர்களுக்கிடையே சிறந்த தேவர்களாயினர்.

  மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page