Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
960.
அறத்தொடு புணர்ந்து,அமரலோகம் அடைவாயோ
 மறத்தொடு மலிந்து எழுநிலத்தும் உறைவாயோ
 திறத்தின் இவ்விரண்டையும் நினைத்து உறுதிசோ¢ன்
 அறப்பொருள் உரைப்பன் உனது அல்லல் கெடும் வண்ணம்
அறத்தினை மேற்கொண்டு அமர வாழ்வு அடையப்போகின்றாயோ? அல்லது பாபத் தொழில் பு¡¢ந்து இந்த ஏழு நரகங்களில் மீண்டும் மீண்டும் சேரப்போகின்றாயோ? இவற்றை நன்கு சிந்தித்து உறுதியானதை ஏற்பாயாயின் உனது அல்லல் நீங்குமாறு,அறத்தின்பயனை உனக்குச் சொல்லுவேன்.

961.
முனைத்து உன்மிசை வந்தவர்கள் மேல் முனிதலின்றி
 நினைத்திடு இது முன்னை என் வினைப்பயனது என்றே
 மனத்தின் மறம் மேவின் மிகுபாவம் வரும் வந்தால்
 உனைப்பின்னை விலங்கிடை உய்த்து இடரை ஆக்கும்.
உன்மீது வெகுண்டு வந்தவர்களின் மேல் சினங்கொள்ளாது இவ்வாறு நிகழ்வது முன்பு நான் செய்த வினைப்பயன் என்று எண்ணி அமைதிகொள். அதைவிட்டு நீயும் மிக்க குரோதமடைந்தால்,கொடிய பாபமே வந்து சேரும்; அதன்பின் அவ்வினை உன்னை துயரம் மிக்க விலங்குப் பிறவியிலே சேர்த்து இடருறச் செய்யும்.

962.
 அறிவன் முதல் ஐவர் சரணம் புகுதி ஆயின்
 பிறவி மறு சுழியின் வழி ஒழுகுதல் பிழைத்தி
 கறுவு செறி உறுதலொடு வத்துவை அழித்தால்
 இறுதிஇல் பல் தீவினைகள் எய்தி அடும் நின்றே.
அருகப் பெருமான் முதலாக ஐவர் வணக்கத்தை மேற்கொள்வாயாயின் பிறவிச் சுழலில் சிக்காது தப்புவாய். அதை விடுத்து குரோதம் முதலிய கொடும் தன்மைகளைப் பெற்று ஆன்ம குணத்தைக் கெடுப்பாயாயின் முடிவற்ற பல கொடிய பாபங்கள் பந்தித்து நிலைத்து நின்று உன்னை வாட்டும்.

963.
வீட்டினை விளைக்கும் நல காட்சியினை விட்டுஇம்
 மோட்டு நரகத்துயர் முழங்கு அழலின் வீழ்ந்தாய்
 மீட்டும் நரகத்திடை விழாத வகை வேண்டின்
 காட்சி தலை நின்றொழுகு காதல் முதல் நீத்தே.
முக்தியை அளிக்கும் நற்காட்சியை இழந்து மிகவும் கொடிய நெருப்பிற்குச் சமமான நரகத்திலே வீழ்ந்தனை; மீண்டும் இந்தக் கதி நேரக்கூடாது என்று உயர்நிலையில் தவறாது நிலைத்து நின்று ஒழுகுவாயாக.

964.
வெகுளி,மதம்,மாயம்,மிகைபற்றல் இவை வினைக்குப்
 புகுதும்வழி நல்லவல பொறை வளைவு செம்மை
 நகையுடன் உவந்து ஈதல் இவை நல்வினைக்கு வாய்தல்
 பகை உறவு தெளிவு பணிவு இன்பங்களைப் பயக்கும்.
சினம்,செருக்கு,மாயம்,கடும்பற்று இந்த நான்கு கஷாயங்களும் தீ வினைகள் வந்து சேரும் வழிகளாகும்; நன்மையும் வலிமையும் பொருந்திய பொறுமை,அடக்கம்,உண்மையும் பொருந்தி மன முகமலர்ச்சியுடன்,உத்தம முனிவர்களுக்கு வாயில்களாகும். ஆகவே உயிருக்குப் பகையாகிய பாப காரணங்களையும்,சுகத்தைத் தரும் புண்ணிய காரணங்களையும் உணரும் நற்காட்சியினாலாகிய பணிவானது இணையற்ற இன்பங்களை த்மனுக்கு அளிக்கும்.

  நிரையத்துள் அறவுரைச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page