Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1041.
மூகர் மொழிந்தார், விடையின் முடவர்கள் நடந்தார்
 சோகம் ஒழிந்தார்எவரும், செவிடர் மொழி கேட்டார்
 கோபம் ஒழிந்தார் குபிதர், குருடர் விழிபெற்றார்
 வேகம் ஒழிந்து, ஆறிய நம் வீரன் எழும்பொழுதே.
மோகனீயம் முதலாகிய வினைகள் அடியோடு ஒழிய, ஆ+E1038ன்ம குணத்தை முழுமையாக எய்திய இறைவன் ஸ்ரீவிஹாரம் சென்றபோது, ஊமைகள் பேசும் திறம் பெற்றனர்; நொண்டிகள் ஏறுபோல் நடக்கலாயினர்; அனைவரும் தத்தம் துன்பம் ஒழிந்தனர்; செவிடர்கள் கேட்கும் ஆற்றலைப் பெற்றனர்; சினம் கொண்டோர் அதை ஒழித்தனர், குருடர்கள் கண்ணொளி பெற்றனர்.

1042.
பிறவியுறு பகையுடைய பணி நகுலம் முதலாம்
 உறவி இறவாத உறவாய் அவண் நிலத்துக்கு
 இறைவன் நிறைகாதலொடும் அங்கு எதிர்கொண்டார்
 மறமலிவில் ஆழியுடை மன்னவனை வந்தே
பிறப்பால் இயல்பான பகையுடைய பாம்பு, கீ¡¢ போன்ற உயிர்கள் இறைவன்மீது பக்தியுடையவைகளாய், பகை மறந்து நட்புடன் அங்குவந்து அறவாழியையுடைய இறைவனை எதிர்கொண்டன.

1043.
வெவ்வினைகள் தீர விமலன் கமலமேற்கொண்டு
 இவ்வகை எழுந்தருளி வந்த இவை கண்டு ங்கு
 அவ்வியமில் மைந்தரை அணைந்து சிலர் சொன்னார்
 மெளவல் மலர் தூய, அவரும் மலரடி பணிந்தார்
கொடுமை தரும் தீவினைகள் நீங்குமாறு, தேவ கமலத்தின் மீது இவ்வாறு ஸ்ரீவிஹாரம் மேற்கொண்ட அதிசயத்தை ஒரு சிலர் சென்று குற்றமற்ற தெளிந்த மனமுடைய மேரு மந்தரர்களிடம் தொ¢வித்தனர். உடனே அவர்களும் காட்டு மல்லிகை மலர்களைத் து¡வி, தாம் இருந்த இடத்திலேயே உடனடியாக இறைவனை திசை நோக்கிப் பணிந்தனர்.

1044.
ஏழடி எழுந்து, வந்து ஆங்கு இறைவனை இறைஞ்சி ஏத்திப்
 பாழி அம் தடக்கை வேந்தர், பலகலம் அவர்க்கு நல்கி
 ஏழுயர் உலகம் தன்னுள் இருள்கெட எழுந்த கோவின்
 சூழ்ஒளி அனைய பாதம் தொழுது நாம் எழுக என்றார்.
அவர் இருவரும் தங்கள் இடம்விட்டு இறங்கி, ஏழடிது¡ரம் நடந்து வந்து, பகவானை திசைநோக்கி வணங்கி, வா¡¢ வழங்கும் தம் கைகளால் இச் செய்தியைத் தொ¢வித்தவர்களுக்குப் பல்வகை அணிகளைக் கொடுத்து இந்த ஏழு உலகங்களிலும் மித்யாத்துவ இருள் நீங்குமாறு ஸ்ரீவிகாரமாகி வந்த இறைவனுடைய கதிரவன் ஒளிபோல் பிரகாசிக்கும் திருவடிகளை நாமும் தொழுவோம் எழுக, எனத் தமது பா¢வாரங்களுக்குக் கட்டளையிட்டனர்.

1045.
முரன்றன சங்கம், எங்கும் முழங்கின முரசம் நின்று
 துரங்கம் ஏறி, யானைமேல் மன்னர், தொடையல் ஏந்தி
 நிரந்தனர் நெளிந்தது அன்று நிலமகள் முதுகு நீடும்
 கரந்தன கடியவாய கருவினைக் குழாங்கள் ஆங்கே.
உடனே சங்குக்ள முழங்க, முரசுகள் ஒலிக்க, மேரு மந்தரர்கள் யானைமீது அமர, மற்ற பா¢வாரங்கள் குதிரை முதலான வாகனங்களில் ஏறி ஒன்று சேர்ந்தனர். பூமாதேவியின் முதுகு நெளிந்தது. உயிர்களிடத்து நீண்ட காலமாகச் சூழ்ந்திருந்த தீவினைகள் நீங்கின.

  ஸ்ரீ விஹாரச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page