Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
921.
மதியோடு கா¢ய மேகம் கண்டமாக் கடலைப் போலப்
 பதியவர் காதல் பொங்கப் பார்த்திபர் புக்க போழ்தின்
 விதியறி புலவர் சூழ்ந்து வெற்றிச்சீ யாச னத்து
 மதியன்ன குடையின் நீழல் வைத்துச் சாமரைகள் வீச.
முழுமதியுடன் கார்மேகத்தை ஒருங்கே கண்ட கடல் பொங்குவது போல் மன்னர்கள் இருவரையும் கண்ட நகர மக்கள் மகிழ்ச்சியால் பொங்கினர். முறையறிந்த அந்தணப் புலவர்கள் வெற்றி அ¡¢யணையில் அரசர்களை அமரச் செய்து கவா¢ வீசினர்.

922.
பாற்கடல் பரவைத் தெண்ணீர்ப் பருதியின் படிய கும்பம்
 ஆற்ற ஆயிரத்தோ ரெட்டின் அமரரால் ஏந்தப் பட்ட
 நூற்கடல் கேள்வி யார்கள் நுனித்த மந்திரங்கள் சொல்லி
 ஏற்றவாறு ஆட்டி னார்கள் ஏத்தினார் பார்த்தி வேந்தர்.
கதிரவன் ஒளிபோல் விளங்கும் குடங்கள் ஆயிரத்து எட்டில் பாற்கடல் நீரை அமரர்கள் ஏந்தி நிற்க, நூற் கடலைக் கடந்து நுட்பமாக அறிந்த மந்திரங்களை அந்தணர்கள் ஓதி நீராட்டினார்கள். மண்ணுலக அரசர்கள் அனைவரும் போற்றிப் புகழ்ந்தார்கள்.

923.
முடிஅதன் பின்அ ணிந்தார் முரசங்கள் முழங்க மும்மைப்
 படிமிசை அரசர் ஈரெண் ணாயிரர் பணிய விஞ்சைத்
 தடவரை அரசர் ஐம்பத் தஞ்சினுக் கிரட்டி தாழப்
 படரொளி பரப்ப எண்ணா யிரவர்விண் ணோர்ப ணிந்தார்.
திரை மறைவில் நீராட்டிய பிறகு எண்வகை முரசுகள் முழங்க முறைப்படி முடி சூட்டினார்கள். அப்போது மூவுலகத்திலுமுள்ள அரசர்கள் பதினாராயிரம் பேரும், நூற்றுப்பத்து விஞ்சை வேந்தர்களும் கணபத்த தேவர்கள் எட்டாயிரம் பேர்களும், ஒளிவிளங்குமாறு வணங்கினார்கள்.

924.
யானையின் தொகுதி நாற்பத் திரண்டுநூ றாயிரம் தேர்
 மானமற் றதுவே வாசி ஒன்பதின் கோடி காலாள்
 தானும்நாற் பத்தி ரண்டு கோடிதா னவர்கள் தேவர்
 தானமா னங்கள் எண்ணா யிரம்அறு படையி தாமே.
பலதேவ வாசுதேவர்களுக்கு உ¡¢ய படையில், நாற்பத்திரண்டு லக்ஷம் யானைகளும், அதே அளவில் தேர்களும், குதிரைகள் ஒன்பது கோடியும், நாற்பத்திரண்டு கோடி படை வீரர்களும், விஞ்சையர் எட்டாயிரம் கணபத்த தேவர் எட்டாயிரம் இந்த அளவினையுடைய அறுவகைப் பி¡¢வுகள் அமைந்திருந்தன.

925.
ஆழிவேல் தண்டு சங்கம் அருமணி வில்லு வைவாள்
 ஏழுமா இரத னங்கள் ஏழாயிரம் அமரர் காப்ப
 மாழைமே கலையின் மாதே வியர்எண்ணா யிரத்தி ரட்டி
 வேழமேல் திறைகொண் டெய்தும் நாடுமே லுரைத்த தாமே.
இவர்கள் இருவா¢ல் வாசுதேவனுக்கு சக்கரம், வேல், தண்டு, சங்கு, மணி, வில், கூ¡¢யவாள் இவை ஏழும் இரத்தினங்கள் எனப்படும். இவைகளை ஏழாயிரம் வியந்தர தேவர்கள் காவல் பு¡¢ந்தனர். இவனுக்குத் தேவியர் பொன் மேகலை யணிந்த மகளிர் பதினாறாயிர மாகும். யானைகளின் மேல் திறைப்பொருளை அனுப்பி வைக்கும் நாடுகளும் பதினாறாயிரம்.

  பலதேவன் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page