Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1005.
அழலிடை மலையை ஏந்தி வந்தவன், அம்மலைக்கீழ்
 நிழலிடைப் பெற்ற இன்ப நீர்ப்பு, இடும்பைக்கண் இன்பம்
 சுழலவும் உழுவை நிற்பத் தளி¡¢னைக் கறித்து மெல்லும்
 உழை உறும் இன்பம் போலும், விலங்குறும் இன்பம் என்றான்.
துன்பமயமான இல்லறத்தில் எய்தும் இன்பமானது, பரந்து எ¡¢யும் நெருப்பில், மலையைச் சுமந்துசென்ற ஒருவன் அம்மலையின்கீழ் உள்ள நிழலில் பெற்ற இன்பத்தைப் போன்றதாகும். விலங்குகதியில் பெறும் இன்பமானது - நாற்புறமும் புலிகள் சூழ்ந்து நிற்க இடையில் நிற்கும், எளிய மான் மெல்லிய தளிர்களைச் சுவைத்துண்ணும் இன்பத்திற்கு இணையாகும் என்றான்.

1006.
அருளிலார்க்கு இல்லை இன்பம் ஆர்கலி உலகத்தின் கண்
 பொருளிலார்க்கு இன்பம் இல்லாவாறு போல் பொன் கொள்வா¡¢ல்
 தொ¢விலார்க்கு இல்லை என்றும் தீநெறிச் செல்லல் நீங்கல்
 மருளிலா மனத்தை யாய் நீ மனையறம் மருவுக என்றான்.
கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் பொருளற்றவர்க்கு இன்பமில்லாததைப்போல், உயிர்கள் மாட்டு அருள் இல்லாதார்க்கும் இன்பமில்லை. பொன் வாணிபம் செய்வார்க்கு அதன் திறனறியும் சக்தியில்லையேல் பயனில்லை, அதுபோல் நற்காட்சியில்லாதவர்களுக்கு இல்லறச் சுழலின் நீங்கி நற்கதியடைதல் இயலாது. எனவே, மயக்கமற்ற மனமுடையனாகி உயர்ந்த இல்லறத்தினை மேற்கொள்வாயாக என்றான்.

1007.
அரசன் சஞ்சயந்தனாக, அவற்கு நீ அமைச்சனாகப்
 பொ¢ய மாதேவியானேன், பின்னை அப்பவங்கள் தோறும்
 மருவிநாம் மகிழ்ந்து சென்ற பிறப்பு மற்று அதனுக்கப்பால்
 ஒருவரால் உரைக்கலாகா உலந்தன பிறவி மேனாள்.
இந்தச் சஞ்சயந்தபட்டாரகன் முன்பு சிம்மசேன அரசனாகவும், நீ அவன் அமைச்சன் ஸ்ரீபூதியாகவும், நான் பட்டத்தரசி இராமதத்தையாகவும் இருந்தோம். இப்போது நான் சொன்ன பல பிறவிகள் வினைப்பயனால் நாம் விரும்பிப் பெற்றவையாகும், அப்பிறப்புகளுக்கு முன்பும் நாம் எடுத்து விடுத்தப் பிறவிகளை யாராலும் எண்ணிச்சொல்ல இயலாது என்றான்.

1008.
இணையன கேட்டுத் தன்னை இழித்து அந்த வித்துத்தந்தன்
 மனம் மலி கறுவு நீங்கி வானவன் தன்னை வாழ்த்திக்
 கனைகழல் அரசன்தன் மேல், கறுவினால் பிறவிதோறும்
 நினைவிலேன் செய்ததீமை, நீங்குமாறு அருளுக என்றான்.
இத்தகைய அனைத்தையும் கேட்ட வித்துத்தந்தன், தன்னைத்தானே பழித்து மனதில் தங்கிய குரோதம் நீங்கவும், ஆதித்யாப தேவனை மனமார வாழ்த்தி கழலணிந்த சிம்மசேன அரசன் மேல்கொண்ட துவேஷத்தினாலே, எடுத்த பிறவிகளெல்லாம் நல்லுணர்வில்லாமல் நான் இயற்றிய கொடுமைகள் நீங்கும் வண்ணம் எனக்கு நல் உபதேசத்தை அருளுக என வேண்டினன்.

1009.
இறைவனாய் உலகம் ஏத்த, இருந்த சஞ்சயந்தன் பாதம்
 நறைஉலா மலர்கள் தூவி, வணங்கென நமோ என்றேத்தி
 அறிவிலேன் செய்ததீமை பொறுக்க என்று அவுணன் போனான்
 உறுதி நின்று உரைத்த வானோன் உவந்து தன் உலகம் புக்கான்.
மூன்று உலகத்தவரும் இறைவன் என்று போற்றுமாறு இருந்த சஞ்சயந்த பட்டாரகரது, பாதங்களை மலர்களால் அர்ச்சித்து வணங்கு என்றான். வித்துத்தந்தன், நமோத்து எனக்கூறி வழிபட்டு அறிவற்றவனாகிய நான் செய்த தீமைகளை இறைவனே பொறுத்தருள்க எனவேண்டிய பிறகு தனது இருப்பிடம் எய்தினான். உறுதியை உரைத்த ஆதித்யாப தேவனும் மனம் மகிழ்ந்து தனது உலகம் அடைந்தான்.

  பிறவி முடிச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page