Download PDF
முகப்பு வாயில்



அறத்துப்பால் > துறவற இயல் > செல்வம் நிலையாமை
5.
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
 பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
 கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
 தொடுத்தாறு செல்லும் சுரம்.

ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)

6.
இழைத்தநாள் எல்லை இகவா பிழைத்தொ¡£இக்
 கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை - ஆற்றப்
 பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
 தழீம்தழீஇம் தண்ணம் படும்.

ஆயுட் காலத்தின் எல்லையைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை 'தழீம் தழீம்' என்னும் ஓசையுடன் எழும்

செல்வம் நிலையாமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next