Download PDF
முகப்பு வாயில்



அறத்துப்பால் > துறவற இயல் > செல்வம் நிலையாமை
7.
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
 கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் - ஆற்ற
 அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும்
 பிறந்தும் பிறவாதார் இல்.

எமன், ஒளி மிக்க சூ¡¢யனை, 'நாழி' என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருளுடையவராக ஆகுங்கள்! அப்படி காதவர் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே வர்!

8.
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
 புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
 கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
 மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையயோம்!' என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினா¢ன் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தொ¢யாமல் அழிந்துவிடும்!

செல்வம் நிலையாமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next