Download PDF
முகப்பு வாயில்



அறத்துப்பால் > துறவற இயல் > செல்வம் நிலையாமை
9.
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
 துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
 வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
 இறந்தான்என் றெண்ணப் படும்.

ஒருவன் தான் உண்ணாதவனாய், மதிப்பை நிலை நிறுத்தாதவனாய், மிக்க புகழுக்கு¡¢ய செயல்களைச் செய்யாதவனாய், நெருங்கிய உறவினா¢ன் துன்பங்களைக் களையாதவனாய், இரப்பார்க்குக் கொடாதவனாய், வீணாகப் பொருளைக் காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! (செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.)

10.
 உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
 கெடாஅத நல்லறமும் செய்யார் கொடாஅது
 வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலை நாட
 உய்த்தீட்டும் தேனீக் கா¢.

வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலா¢னின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்!

செல்வம் நிலையாமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next