Download PDF
முகப்பு வாயில்



அறத்துப்பால் > துறவற இயல் > தீவினை அச்சம்
121.
துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
 மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
 விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
 புல்லறி வாளர் வயிறு.

சுடுகாடுகள், துயரங்களைத் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அவற்¨றிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து). ஒழிக்கும் துறவற நெறியை அடையாத மக்களின் பிணத்தையுடையன. அற்ப அறிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து)

122.
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
 கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்
 காட்டுளாய் வாழுஞ் சவலும் குறும்பூழும்
 கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.


வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதா¡¢யையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள்.

தீவினை அச்சம்
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next