Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > கல்வி
139.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
 நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
 ஒண்ணிறப் பாதி¡¢ப்பூச் சேர்தலாற் புத்தோடு
 தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

பழமையான சிறப்பினையுடைய அழகிய பாதி¡¢ப்பூவைச் சேர்ந்திருப்பதால் புதிய மண்பானையானது, தன்னிடத்தில் உள்ள தண்ணீருக்குத் தான் நறுமணத்தைக் கொடுத்து, அத்தண்ணீரையும் நறுமணமுள்ளதாக்கும். அதுபோல கல்லாரே ஆயினும் கற்றாரைச் சார்ந்து அவர்போல் நடந்தால் நல்லறிவு நாளும் உண்டாகப் பெறுவர். (புதிய மண்பானையானது பாதி¡¢ப்பூவைச் சேர்தலால் தன்னிடமுள்ள தண்ணீருக்கு நறுமணம் தருவது போல, கல்லாதார்க்கும் கற்றவர் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்பது கருத்து).

140.
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
 உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
 கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
 போஒம் துணையறிவார் இல்.

எல்லையற்ற கல்விகளுக்குள்ளே மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களைக் கற்பதெல்லாம் 'கலகல' என்னும் வீணான சலசலப்பே யாகும்! இத்தகைய இவ்வுலக அறிவு நூல்களைக்கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தைப் (துன்பத்தை) போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை.

கல்வி
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next