Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > குடிப்பிறப்பு
141.
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
 குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
 இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அ¡¢மா
 கொடிப்புல் கறிக்குமோ மற்று.

பசித்துன்பம் மிகுதியாக வந்த போதும் சிங்கம் அருகம்புல்லைத் தின்னுமோ? தின்னாது. அதுபோல, உடை கிழிந்து, உடல்மெலிந்து, வறுமையுற்ற போதும் உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தமக்கு¡¢ய ஒழுக்கங்களில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

142.
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
 வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது வான்தோயும்
 மைதவழ் வெற்ப படாஅ பெருங்செல்வம்
 எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

மேகங்கள் தவழும், வானளாவிய மலைகளையுடைய மன்னனே! பெருந்தன்மை, மென்மை, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் என்னும் இவை மூன்றும் மிகவும் உயர்ந்த குடியில் பிறந்தவா¢டம் அல்லாமல், பெரும் செல்வம் உண்டான காலத்தும் பிறா¢டம் உண்டாகமாட்டா.

குடிப்பிறப்பு
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next