Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > இன்பவியல் > அறிவுடைமை
241.
பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
 தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
 இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
 அணங்கருந் துப்பின் அரா.

வருத்தத்தைச் செய்யும் மிக்க வலிமையுடைய பாம்பு, திங்கள் இளம்பிறைச் சந்திரனாக இருக்கும் பொழுது, அதனை விழுங்கச் செல்லாது. அதுபோல, வெல்லும் தகுதியுடையோர், பகைவர் மெலிந்திருக்கும் சமயம் பார்த்து, அவர்தம் மெலிவுக்குத் தாமே வெட்கம் அடைந்து, அவருடன் போர் செய்யப் புறப்படமாட்டார்கள். (பகைவர் தளர்ந்திருக்கும்போது அவரை வெல்ல நினையாது அவரது நிலைகண்டு இரங்குதல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

242.
நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
 அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர்
 மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
 கோத்திரம் கூறப் படும்.

பொ¢ய, குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! வறுமையுற்ற மக்களுக்கு அணிகலமாவது அடக்கமுடைமையாகும்; அடக்கமின்றி அளவு கடந்து நடப்பாராயின் ஊ¡¢ல் வாழ்பவரால் அவர்களது குலமும் இழித்துரைக்கப்படும். (வறுமையிலும் அடங்கியிருத்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

அறிவுடைமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next