Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > இன்பவியல் > அறிவுடைமை
245.
கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
 உப்புண்டு உவா¢ பிறத்தலால் தத்தம்
 இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
 மனத்தனையர் மக்கள்என் பார்.

அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும். ஆதலால் மக்கள் தாம் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர்; தம் தம் மன இயல்பை ஒத்தவராவர். (மாசற்ற, தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் தி¡¢யார் என்பது கருத்து).

246.
பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
 ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
 மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
 விராஅஅய்ச் செய்யாமை நன்று.

பருத்த அடி மரத்தினையுடைய புன்னை மரங்களால் பொலிவு பெற்ற குளிர்ந்த கடற்கரையையுடைய மன்னனே! நிலையான மனம் உடையவர்கள் இனிய செய்கையுடை யா¡¢டத்தும் நீங்குதலும் பின் சேர்தலும் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். இப்படிச் சேர்ந்து நீங்குதலை விட முதலிலேயே நட்புச் செய்யாதிருத்தல் நல்லது. (அறிவுடையார் கூடிப் பி¡¢தலும் மீண்டும் கூடுதலும் இலர் என்பது கருத்து).

அறிவுடைமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next