Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > இன்பவியல் > அறிவுடைமை
247.
உணர உணரும் உணர்வுடை யாரைப்
 புணா¢ற் புணருமாம் இன்பம் - புணா¢ன்
 தொ¢யத் தொ¢யும் தொ¢விலா தாரைப்
 பி¡¢யப் பி¡¢யுமாம் நோய்.

நாம் ஒன்றை மனத்தில் நினைக்க, அதனைக் குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பம் மிகும். அப்படியின்றி, நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தொ¢ந்த போதும் அவற்றை உணராத அறிவிலாரை நண்பராகக் கொள்வோமானால், அவர்களால் உண்டாகும் துன்பம், அவர்களை விட்டுப் பி¡¢ய, தானே நீங்கும். (குறிப்பறியும் நுண்ணறிவுடையாரைக் கூடுதலும் அ·து இலாதாரைப் பி¡¢தலும் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

248.
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
 நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
 மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்
 தலையாகச் செய்வானும் தான்.

நல்ல நிலையிலே தன்னை நிறுத்திக்கொள்பவனும், அந்த நிலையைக் கெடுத்துத் தன்னைத் தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்திக்கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான். (ஒருவனது உயர்வு தாழ்வு அவனது அறிவினாலேயே உண்டாகும் என்பது கருத்து).

அறிவுடைமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next