Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > இன்பவியல் > அறிவுடைமை
249.
கரும வா¢சையால் கல்லாதார் பின்னும்
 பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
 ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
 பேதைமை யன்றுஅது அறிவு.

அருமையாக ஒரே சீரான முறைப்படி அலைகள் ஆரவாரம் செய்யும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு வேந்தனே! சமுதாயத்திற்குப் பயன்தரத்தக்க ஒரு நல்ல கா¡¢யம் முறைப்படி இனிதே நிறைவேறும் பொருட்டு, பெருமை யுடையோரும் அறிவில்லார் பின் செல்வது அறியாமையன்று; அ·து அறிவுடைமையே! (கல்லாதாருடன் ஒரு நல்ல கா¡¢யத்தின் காரணமாகக் கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

250.
கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
 தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
 முட்டின்றி மூன்றும் முடியுமேல் அ·தென்ப
 பட்டினம் பெற்ற கலம்.

நல்ல தொழில் முயற்சியிலும் ஈடுபட்டுப் பொருளைச் சேர்த்து, இன்பமும் துய்த்து, தருமத்தையும் தகுதியுடையார்க்கே செய்து, ஒரு பிறப்பிலேயே இம்மூன்று செயல்களையும் தடையில்லாமல் நிறைவேற்ற முடியுமானால், அச்சாதனை, வாணிகத்தை வெற்றியுடன் முடித்துத் தான் சேர வேண்டிய துறைமுகப் பட்டினத்தைச் சேர்ந்த கப்பல் போல் இன்பம் தரும் என்பர். (ஒரு கப்பல், பல நாடுகளுக்கும் சென்று அலைந்து வியாபாரத்தை முடித்துத் தன்னிலையில் சேர்வதுபோல ஒருவன் பல பிறவிகள் எடுத்து உழன்று கடைசிப் பிறவியில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் பெற்று முத்தி அடைதலால் அப்பிறவி பயனுள்ள பிறவியாம் என்பது கருத்து).

அறிவுடைமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next