Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > இன்பவியல் > அறிவின்மை
251.
நுண்ணுணர்வு இன்மை வறுமை அ·துடைமை
 பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் - எண்ணுங்கால்
 பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ
 கண்ணவாத் தக்க கலம்.

பெண்மை இயல்பு மிகுந்து ண்மை இயல்பு குறைந்துள்ள பேடியும் கண்கள் விரும்பிக் காணத்தக்க அணிகளை அணிய மாட்டாளோ? அணிந்து கொள்வாள். (ஆயினும் இவை செல்வமாகா) ஆராய்ந்து நோக்குமிடத்து, நுட்பமான அறிவின்மையே வறுமையாகும். அ·து உடைமையே மிகப்பொ¢ய செல்வமாகும். மனிதர்க்குச் செல்வம் என்பதும் வறுமை என்பதும், அறிவும், அறிவில்லாமையுமேயன்றிப் பொருளும் பொருளின்மையும் அன்று என்பது கருத்து).

252.
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
 அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
 நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
 பூவின் கிழத்தி புலந்து.

பல வகை நூல்கேள்விகளால் நிறைந்த பயனை அறிந்த நல்லறிஞர் தம் பெருமை குன்றி வறுமைத் துன்பத்தால் வாடுவதற்கு¡¢ய காரணத்தை அறிய விரும்புவீராயின் கூறுகிறேன். கேளுங்கள்! பழமையான சிறப்புள்ள நாவிற்கு¡¢ய கலைமகள் தங்கியிருப்பதால் பூவில் உறைதற்கு¡¢ய திருமகள் வெறுப்புற்று அந்நல்லவா¢டம் சேரமாட்டாள். (காலமெலாம் கற்று அறிவைப் பெருக்குவதிலேயே நாட்டமுள்ள நல்லறிஞர் பொருள் சேர்க்க வேண்டும் என்ற விருப்பமே இல்லாமல் வறுமையடைகின்றனர் என்பது கருத்து).

அறிவின்மை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next