Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > இன்பவியல் > நன்றியில் செல்வம்
261.
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
 பொ¡¢தாள் விளவினை வாவல் குறுகா
 பொ¢தணிய ராயினும் பீடிலார் செல்வம்
 கருதுங் கடப்பாட்ட தன்று.

(தான் வாழும் மரத்துக்கு) அருகிலே இருப்பதாகிப் பல பழங்களைக் கொண்டதாக இருப்பினும், பொ¡¢ந்த அடி மரத்தையுடைய விளாமரத்தை வெளவால் நெருங்காது. அதுபோல, தாம் இருக்கும் இடத்துக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவராயினும் பெருமையில்லாதார் செல்வம் 'அவர் தருவார்' என ஏழைகளால் நினைக்கத்தக்க தன்மையுடையதன்று. (பெருந்தன்மையில்லாதார் செல்வம் எளியோர்க்குப் பயன்படாது).

262.
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
 கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
 செல்வம் பொ¢துடைய ராயினும் கீழ்களை
 நள்ளார் அறிவுடை யார்.

அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையானாலும், அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால், யாரும் கள்ளி மரத்தின்மீது கை நீட்டமாட்டார்கள். அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவரானாலும் அவர் செல்வம் பயன்படாமையால் கீழ்மக்களை அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள்.

நன்றியில் செல்வம்
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next