Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > துன்பவியல் > ஈயாமை
275.
எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
 அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
 மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
 கழிநல் குரவே தலை.

மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதா¡¢ன் செல்வத்தைவிடச் சான்றோ¡¢ன் மிக்க வறுமையே மேலானது. (உலோபிகள் செல்வம் பெற்றிருப்பினும் வறியரான சான்றோரளவு கூட உதவார்).

276.
எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
 எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
 தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
 யானும் அதனை அது.

அறிவில்லாதவன், தான் சேர்த்த பொருளை, 'என்னுடையது என்னுடையது' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். நானும் அப்பொருளை 'என்னுடையது என்னுடையது' என்று எண்ணிக் கொண்டிருப்பேன். ஏனெனில், அ·து அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான்; தானும் அனுபவிக்க மாட்டான். அது போலவே நானும், அப்பொருளைப் பிறர்க்குத் தராமலும், நான் அனுபவிக்காமலும் இருக்கிறேன். (தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன் தராத செல்வம் யா¡¢டம் இருந்தாலென்ன? வறியவர்க்குக் கொடுக்காத செல்வம், அதனைப் பெற்றவனுக்கும் உதவுவதில்லை என்பது கருத்து).

ஈயாமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next