Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > துன்பவியல் > ஈயாமை
277.
வழங்காத செல்வா¢ன் நல்கூர்ந்தார் உய்ந்தார்
 இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
 காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
 யாப்புய்ந்தார் உய்ந்த பல.

ஒருவருக்கு ஒன்றைக் கொடாத செல்வரைவிட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்து தப்பியவர் ஆவர். எவ்வாறெனில், 'செல்வத்தையெல்லாம் இழந்தார்' என உலகோர் பழிக்கும் பழிச் சொல்லினின்றும் தப்பினர்; வருந்திச் செல்வத்தைக் காத்தலின்றும் தப்பினர்; அச்செல்வத்தைப் பிறர் அறியாதவாறு புதைப்பதற்காக நிலத்தைத் தோண்டும் துன்பத்தினின்றும் தப்பினர். இப்படி அவ்வறியவர் தப்பினவை பல உண்டு. (ஈயாதார்க்குத் துன்பமேயன்றி இன்பம் இல்லை).

278.
தனதாகத் தான்கொடான் தாயத் தவரும்
 தமதாய போழ்தே கொடாஅர் தனதாக
 முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
 பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

பொருள் தன்னுடையதாக இருக்கும்போது ஓர் உலோபி தானும் பிறர்க்குக் கொடுக்க மாட்டான். அவனுடைய பங்காளிகளும் அப்பொருள் தமதான காலத்தில் கொடுக்க மாட்டார்கள். முதலில் தன்னுடையதாயிருந்தபோது அவன் கொடுக்க முனைந்திருப்பினும் அப் பங்காளிகள் தடுத்திருக்க மாட்டார்கள். பின் பங்காளிகள் கொடுக்கும்போது இறந்துபோன அவன் வந்து தடுக்கமாட்டான். அப்படியிருக்க அவர்கள் கொடாமைக்குக் காரணம் யாதோ? (பொருள் தனக்கு உ¡¢யதாய் இருக்கும்போதே பிறர்க்குக் கொடுத்துப் பயன்பெற வேண்டும் என்பது கருத்து).

ஈயாமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next