Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > துன்பவியல் > இன்மை
281.
அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
 பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
 ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும்ஒன்று இல்லாதார்
 செத்த பிணத்திற் கடை.

காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.

282.
நீ¡¢னும் நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும்
 யாரும் அறிவர் புகைநுட்பம் - தோ¢ன்
 நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
 புகற்கா¢ய பூழை நுழைந்து.

தண்ணீரை விட நெய் நுட்பமானது என்பர்; அந்த நெய்யைவிடப் புகை நுட்பமானது என்பதனை யாவரும் அறிவர். ஆராய்ந்து பார்க்குமிடத்து இரத்தலாகிய துன்பம் உடையவன் அப்புகையும் புகுதற்கு அ¡¢ய துவாரத்தில் நுழைந்து செல்வான். (வறுமையாளன் எல்லாக் காவலையும் கடந்து, செல்வரை நாடிச் செல்வான் என்பது கருத்து).

இன்மை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next