Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பொதுவியல் > அவையறிதல்
313.
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
 கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார் - கற்ற
 செலவுரைக்கும் ஆற்றியார் தோற்ப தறியார்
 பலவுரைக்கும் மாந்தர் பலர்.

பேச்சாற்றல் ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு விரைந்து சொல்ல ஆசைப்படுவோர், கல்வி மிகுதியுடையோர் வன்மையையும் அறியார்; தாம் கற்றவற்றைப் பிறர் விரும்பிக் கேட்குமாறு சொல்லுதலையும் அறியார். தாம் வாதில் தோற்பதையும் அறியார்; இவ்வாறிருந்தும் விடாமல் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர். (பயனில் பேசுவோருடன் சேரக் கூடாது என்பது கருத்து).

314.
கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
 பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
 நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
 புல்லறிவு நாட்டி விடும்.

ஓர் அறிவற்றவன் ஆசி¡¢யரை வழிபட்டுக் கற்காமல், பள்ளியில் அவ்வாசி¡¢யர் பிறருக்குச் சொல்லுங்கால், தற்செயலாகத் தொ¢ந்துகொண்ட ஒரு பாட்டினை, கற்றோர் அவையில் நாணாமல் கூறித் தன் புல்லறிவினை வெளிப்படுத்துவான்.

அவையறிதல்
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next