Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பொதுவியல் > அவையறிதல்
315.
வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
 கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
 உரைவித் தகம்எழுவார் காண்பவே கையுள்
 கரைவித்துப் போலும்தம் பல்.

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி, தாமும் தம் சொல்லாற்றலைக் காட்ட முயல்வார். (அவரால் தாக்கித் தகர்க்கப்பட்ட) தம் பல்லினைச் சுரை விதைபோல, தம் கையிலே விழக் காண்பார். (அறிவிலார் முன் அறிஞர் தமது நாவன்மையைக் காட்டிச் சிறுமை அடையக் கூடாது என்பது கருத்து).

316.
பாடமே ஓதிப் பயன்தொ¢தல் தேற்றாத
 மூடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச்
 சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
 ஈன்றாட்கு இறப்பப் பா¢ந்து.

ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள் வெறுக்கத்தக்கவற்றைக் கூறும்போது, கேடில்லாத மேன்மையுடைய சான்றோர், அந்த மூடரைப் பெற்ற தாய்க்காக 'என்னே இவள் செய்த பாவம்!' என மனம் வருந்தி நாணத்தால் தலை குனிந்து நிற்பர். (அறிவிலிகள் தவறாகக் கூறினாலும் அறிஞர்கள் அமைதியோடு இருக்க வேண்டும் என்பது கருத்து).

அவையறிதல்
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next