Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பொதுவியல் > அவையறிதல்
317.
பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
 கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றும்
 முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
 அறிதற் கா¢ய பொருள்.

பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளி¡¢ன் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அ¡¢தாம்.

318.
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தொ¢யார்
 உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
 போற்றும் புலவரும் வேறே பொருள்தொ¢ந்து
 தேற்றும் புலவரும் வேறு.

புத்தகங்களை மிகுதியாகச் சேர்த்து அவற்றின் பொருள் அறியாதவராகிக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும் அப்புலவர்கள் வேறு; அவற்றின் பொருளைத் தொ¢ந்து மற்றவர்க்கும் தொ¢விக்கின்ற புலவர்கள் வேறு. (புத்தகங்களைச் சேர்த்து வைப்பதோடு அவற்றைப் படித்துப் பயனடைய வேண்டும் என்பது கருத்து).

அவையறிதல்
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next