Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பொதுவியல் > புல்லறிவாண்மை
321.
அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
 பொருளாகக் கொள்வர் புலவர் - பொருளல்லா
 ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
 மூழை சுவையுணரா தாங்கு.

அருள் காரணமாக அறம் உரைக்கும் அன்புடையவர் வாய்மொழியை நல்லோர், தமக்குப் பொ¢தும் பயனுடையதாக மதித்து ஏற்பர். ஆனால் ஒன்றுக்கும் உதவாத பேதை ஒருவன் அவ்வறவேர் வாய்மொழியைப் பால் சோற்றின் சுவையைத் துடுப்பு உணராதது போல இகழ்ந்து கூறுவான்.

322.
அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
 செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
 கவ்வித்தோல் தின்னும் குணங்கர்நாய் பாற்சோற்றின்
 செவ்வி கொளல்தேற்றா தாங்கு.

தோலைக் கவ்வித் தின்னும் புலையருடைய நாயானது, பால் சோற்றின் சுவையை அறியாதது போல, பொறாமை இல்லாதார் அறநெறியைக் கூறும்போது அதனை, நற்குணமில்லாதார் காது கொடுத்தும் கேளார், (புல்லறிவினார் அறநெறிகளைக் கேளார்).

புல்லறிவாண்மை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next