Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பொதுவியல் > கயமை
351.
ர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
 காத்தோம்பித் தம்மை அடக்குப - மூத்தொறூஉம்
 தீத்தொழிலே கன்றித் தி¡¢தந்து எருவைபோல்
 போத்தறார் புல்லறிவி னார்.

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் தி¡¢ந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).

352.
செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
 வழும்பறுக்க கில்லாவாம் தேரை - வழும்பில்சீர்
 நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
 தெர்கிற்கும் பற்றி அ¡¢து.

நீர் நிறைந்த பொ¢ய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

கயமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next