Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பன்னெறியியல் > கயமை
363.
எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
 அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
 உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
 கொண்டானைக் கொல்லும் படை.

கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கா¢ய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர். (அரச தண்டனைக்குக் கணவனை உட்படுத்த நினைத்ததால் 'எறி' என எதிர் நிற்பவளைக் கூற்றம் எனவும், காலத்தே உணவு கொள்ளாவிடில் நோய் உண்டாகும். ஆதலால் அட்டில் புகாளைப் பிணி எனவும், பிறர் பசி நோக்காது தான் மட்டுமே உண்பது பேயின் தன்மையாதலால், உண்டி உதவாளைப் பேய் எனவும், கொல்லுதற்கு உ¡¢யது படை ஆதலால் இத்தகைய மூவரையும் பகை எனவும் கூறினார்).

364.
கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட
 ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான் - பேர்த்துமோர்
 இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
 கற்கொண்டு எறியும் தவறு.

இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பொ¢யோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தொ¢ந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர்.

கயமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next